திரையில் ஜெயித்த விஜய்-த்ரிஷா காம்போ..! அரசியலிலும் கை கொடுக்குமா.? தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா த்ரிஷா.?

நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். தான் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும், முழு நேரமாக மக்கள் பணியை மட்டுமே செய்ய விரும்புவதாகவும் தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவருடன் திரையில் இணைந்த நடிகை திரிஷா, கட்சியிலும் இணைவாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திரையுலகின் முன்னணி கதாநாயகனான நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி, தனது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டினார். தமிழ்த் திரையுலகின் முடி சூடா மன்னனாக விளங்கிய அவர், தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 2 படங்களை முடித்துவிட்டு, இனிமேற்கொண்டு சினிமாவை முற்றிலுமாக தவிர்க்கப் போவதாக கூறியுள்ளார்.

புனிதமான மக்கள் பணியை முழு நேரமாக எடுத்து செய்ய விரும்புவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தனது ரசிகர் மன்றங்களின் மூலமாக பல உதவிகளை மக்களுக்கு செய்த அவர், எல்லா மக்களுக்கும் ஆவன செய்வதற்கு அரசியல் ஆளுமையும் தேவை என்பதை உணர்ந்துள்ளார். இதனால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே அவரது இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது கட்சியில் இணைய பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், திரை பிரபலங்கள் யார் யார் இதில் இணையக் கூடும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். த்ரிஷாவும் விஜய்யும் திரையில் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். அவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு இருக்கிறது என்பதும் திரையுலகம் அறிந்ததே!

சமீப காலங்களில் அரசியலில் ஆர்வம் காட்டி வரும் த்ரிஷா, திரையில் இணைந்தது போல கட்சியிலும் விஜய்யுடன் இணைவாரா?, என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சினிமாவில் ஜெயித்த இவர்களது காம்பினேஷன் அரசியலிலும் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திரையுலக பிரபலங்கள் பலரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட உள்ளன.

Next Post

’டாக்டராக இருந்தாலும் ஆக்டராக இருந்தாலும் பாமக போல வருமா’..? நடிகர் விஜயை விமர்சித்த அன்புமணி..!!

Sat Feb 3 , 2024
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுகவுக்கு சமூக நீதி குறித்து பேச தகுதியில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சேலம் வருகை தந்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மக்களவை தேர்தலுக்கு பாமக தயாராக உள்ளது. விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம். தமிழ்நாட்டில் குறுவை சம்பா பாதிப்பு காரணமாக அரிசி விலை இன்னும் ஏற […]

You May Like