பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு? உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியீடு – இந்தியா நிலை என்ன? கொரோனா தடுப்பூசிகளுக்கான போட்டிக்கு மத்தியில், மருத்துவர்கள் எச்சரிக்கும் 5 பக்க விளைவுகள்…

எந்த அறிகுறிகளும் இல்லாமல் தாக்கும் கொரோனா.. ஐஸ்லாந்தில் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்.. இந்தியாவிற்கு என்ன பாதிப்பு..?

corona virus n

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக புதிதாக 227 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1251-ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா குறித்த உச்சக்கட்ட பீதி நிலவும் நிலையில், ஐஸ்லாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி பயத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம்..


ஐஸ்லாந்து என்பது வெறும் 3.64 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ள சிறிய நாடு. அங்கு 1086 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்கு கொரோனா தாக்கப்பட்ட பாதி பேருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

spain coronavirus n

பொதுவாக, காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி, சிலநேரங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஆகியவை கொரோனா வைரஸ் நோய் தொற்றின் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதாவது அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதி பேருக்கு மேற்கூறிய எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. ஆனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

corona us

ஐஸ்லாந்துடன் ஒப்பிடும் போது இந்தியா அனைத்து அம்சங்களிலும் வித்தியாசமானது. அதிலும் குறிப்பாக நாட்டின் மக்கள்தொகை மிகவும் வித்தியாசமானது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியாவில், அறிகுறியற்ற நோயாளிகள் இருந்தால் அது வரும் வாரங்களில் மிகப்பெரிய சமூக பரவலுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

பாதிப்பு எண்ணிக்கையை கண்டறிய, கேரளா போன்ற மாநிலங்கள் விரைவான சோதனைகளை நடத்த திட்டமிட்டிருந்தாலும், மக்கள் தொகை காரணமாக இந்த திட்டம் சிறந்த பலனளிக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில், வெளிநாட்டு பயணம் முடித்து கொண்டு அண்மையில் நாடு திரும்பியவர்களையும், கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்களை மட்டுமே சுகாதார அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.

china corona

ஒருவேளை ஐஸ்லாந்து ஆய்வு முடிவுகளின் படி, இந்தியாவில் அறிகுறியற்ற கொரோனா நோயாளிகள் இருந்து, அவர்கள் விரைவில் அடையாளம் காணப்படவில்லை என்றால் நோய் தொற்று சமூக பரவலாக மாறக்கூடிய அபாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

corona ani 505 120320101408

ஆனால் 14 நாட்கள் முடிந்த பிறகும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் மேலும் 8 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையை ஆராய்ந்த பிறகு, தனிமைப்படுத்தப்படும் காலம் என்பது குறைந்தது 22 நாட்கள் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

1newsnationuser1

Next Post

ஊரடங்கு உத்தரவால் ஆம்புலன்ஸ் வரவில்லை... கர்ப்பிணிக்கு உதவிய காவல்துறை...

Tue Mar 31 , 2020
டெல்லியில், ஊரடங்கு உத்தரவால் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால், காவல்துறையினர் தங்களது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கொரோனா அச்சத்தின் காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் வாயிலாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மேலும், ஊரடங்கு பிறப்பித்துள்ளதால், அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள மெய்டன் கார்கிநகரில் அஞ்சணி என்ற பெண் பிரசவ வலியில் துடித்துள்ளார். உடனடியாக […]
The ambulance did not come through the curfew ... Police assisted pregnant ...

You May Like