கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனை….! குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை….!

ஒரு குடும்பம் என்று இருந்தால் நிச்சயமாக குடும்பத்திற்குள் பிரச்சனை வரும் அது சகஜமான விஷயம் தான். அதற்காக தற்கொலை செய்து கொண்டால் அது ஒரு தீர்வாக இருக்காது என்பதே மனநல மருத்துவர்களின் கருத்தாக இரண்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி செல்வராஜ் (38) இவருக்கு சரிதா (30) என்ற மனைவியும், 3 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்திற்குள் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், கடந்த 6ம் தேதி செல்வராஜ் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார் வேலை முடிவடைந்து நேற்று மாலை அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த செல்வராஜ் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்தார். அங்கே அவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது சரிதா மற்றும் 3 வயது குழந்தை உள்ளிட்ட இருவரும் சடலமாக கடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜ் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன் திரண்டனர். அதன் பிறகு இது தொடர்பாக புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தாய் மற்றும் 3 வயது சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குழந்தையை முதலில் கொலை செய்துவிட்டு அதன் பிறகு சரிதா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. அத்துடன் சரிதாவின் இந்த முடிவுக்கு குடும்ப பிரச்சினை தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்பது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Post

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை.. மீண்டும் ஒரு சவரன் ரூ.43,000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..

Wed Feb 8 , 2023
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,064க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் […]
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

You May Like