கள்ளக்காதலனோடு லாட்ஜில் ரூம் போட்ட பெண் 3 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெங்களூரில் வசித்து வந்தவர் சஞ்சீவ் எம் பாட்டீல் கமலா. இவருக்கு திருமணம் ஆன நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தையல்காரரான திலீப்குமார் என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு கொண்டிருந்தார். இதனை கமலாவின் கணவர் பலமுறை கண்டித்துள்ளார். இருப்பினும் இவர்களது உறவு கடந்த 2 வருடங்களாக தொடர்ந்துள்ளது.
இந்நிலையில் கமலா அங்கன்வாடி ஆசிரியாக பணிபுரிவதால் எப்போதும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை 5.30 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால் நவம்பர் 24 ஆம் தேதி அவர் வீட்டிற்கு வராததால் அவரது கணவர் சந்தேகமடைந்து சித்தப்பூரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் போலீசார் கமலாவை தேடி வந்தனர்.
இதற்கிடையில், ஜே.சி சாலையில் உள்ள அர்ச்சனா கம்ஃபோர்ட்ஸ் ஊழியர்கள் நவம்பர் 27 அன்று துர்நாற்றம் வீசுவதைக் கவனித்து பூட்டிய அறையின் கதவைத் தட்டினர். கதவு திறக்காததால் சந்தேகத்தில் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்த போது ஒரு பெண் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அதன் பின் உடலை மீட்ட போலீசார் வழக்குபதிவு செய்து உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் லாட்ஜில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் கமலா தான் என்று சிசிடிவி காட்சிகள் உறுதி படுத்தின. கமலாவின் கனவரும் சடலத்தை பார்த்து அடையாளம் கண்டார். இதனால் சிசிடிவி காட்சிகள் வைத்து போலீசார் கொலையாளியை தேடினர்.
அதில் நவம்பர் 24 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் கமலா மற்றும் திலீப் இருவரும் லாட்ஜில் ரூம் போட்டதையும் திலீப் மதியம் 2.30 மணிக்கு தனியாக வெளியேறுவதையும் வீடியோ காட்சிகள் காண்பித்தன. கமலா திரும்ப வெளியே வரவில்லை.
திலீப்பைக் கைது செய்ய போலீசார் சிறப்புக் குழுவை அமைத்துள்ளனர், மேலும் இந்தக் கொலைக்கான துல்லியமான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.