சென்னை தனியார் கல்லூரியை சேர்ந்த பேராசிரியைக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர் கோவையில் உள்ள தனது உறவினரை பார்த்து விட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பி கொண்டிருந்தார். அவர் சென்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10 மணி அளவில் காட்பாடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் அமர்ந்து வந்த முதியர்வர் ஒருவர் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பேராசிரியை கத்தி கூச்சலிட்டார். இதனை பார்த்த சகப் பயணிகள் முதிவருக்கு தர்ம அடி கொடுத்தனர். மேலும் ரயில் காட்பாடியை அடைந்ததும் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த முதியவர் ஒண்டிப்புதூரை சேர்ந்த சுரேஷ் (61) என தெரியவந்துள்ளது. அதன்பிறகு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.