கேரளாவில் பெண் ஒருவரை அவளது கணவன் கட்டாயப்படுத்தி குடிக்கவைத்து நண்பர்களுடன் சேர்ந்து 5 வயது குழந்தையை அருகில் வைத்து கொண்டே மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நடு ரோட்டில் வலியால் துடித்த 25 வயது பெண்ணை அந்த வழியில் சென்ற ஒரு நபர் காப்பற்றி முதலுதவி அளித்து தனது காரிலேயே அந்த பெண்ணை வீட்டில் சேர்த்து விட்டு போலீஸிலும் தகவல் கொடுத்துள்ளார்.
பின்பு போலீஸ் விசாரணையில் அந்த பெண் வாக்கு மூலம் அளித்துள்ளார். அவளது கணவர் கடந்த வியாழக்கிழமை தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அருகில் உள்ள புதுகுருச்சி கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்பு அருகில் தனது நபர் வீடு இருபதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவரது நண்பர்கள் முன்னிலையில் மனைவியின் வாயில் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றியுள்ளார். பின்பு தனது மகன் கண் முன்னே கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்த அந்த பெண்ணின் உடம்பில் அங்கங்கே சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர்.
பின்பு ரோட்டில் உடல் முழுதும் இரத்த காயங்களுடன் அழுதுகொண்டிருந்த இந்த பெண்ணை அந்த வழியில் சென்ற இளைஞர் காப்பற்றியுள்ளார். இது தொடர்பாக கேரளா பெண்கள் பாதுகாப்பு அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட பெண்னின் கணவன் மற்றும் அவனது நண்பர்கள் வெள்ளிக்கிழமை கடிநாம்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.