“ச்சீ.. இப்படி எல்லாம் ஒரு அம்மா செய்வாங்களா.”? கணவனை பழி தீர்க்க நினைத்த மனைவிக்கு 5 ஆண்டு சிறை.!

தன் மகளை ஆறு வருடங்களுக்கு முன்பு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி, கணவன் மீது பொய் வழக்கு பதிவு செய்த மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. போலியான ஆதாரங்கள் ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆகஸ்ட் 20, 2019இல், சென்னை செனாய் நகரைச் சேர்ந்த 39 வயது பெண், விவாகரத்து பெற்ற தனது கணவரின் மீது காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில் தனது மகளை, தனது கணவர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக அவரது கணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி அந்த கணவர் மனு ஒன்றை சமர்ப்பித்தார். அந்த மனுவின் மீதான விசாரணையைத் துவங்கியது சென்னை உயர்நீதிமன்றம். அப்போது 6 வருடங்களுக்கு முன்பு தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கு ஆதாரங்களாக, கீழ்பாக்கத்தில் இருக்கும் ஸ்கேன் மையத்திலிருந்து, ஸ்கேன் டெஸ்டுகள் மற்றும் சிறுநீர் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய முடிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இவ்வழக்கு குறித்து தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று தற்போது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட சிறுமையை, கேமராவின் முன் வைத்து வாக்குமூலம் பெற்றனர். தனது தந்தை குற்றமற்றவர் என்று அந்த சிறுமி தெரிவித்துள்ளார். தனது கணவனை பழிவாங்கும் நோக்கிலேயே அந்தப் பெண் இந்த வழக்கை தொடுத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றார். சிறப்பு போக்சோ நீதிபதி எம்.ராஜலட்சுமி, பொய் புகார் அளித்த அந்த பெண்ணுக்கு ₹6000 அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகாவை, இந்த வழக்கை திறம்பட விசாரித்து, தக்க தீர்ப்பை பெற்றுக் கொடுத்ததற்காக பாராட்டினார்.

Next Post

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.. தடுப்பூசியை எந்த கையில் செலுத்த வேண்டும்.? ஆச்சரியம் அளிக்கும் ஆய்வு முடிவுகள்.!

Fri Feb 9 , 2024
மனித உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை தூண்டுவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஊசிகள் போடப்படுகிறது. அம்மை, காச நோய், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. சமீபத்தில் உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கும் தடுப்பூசி கண்டறியப்பட்டு செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசிகளை இரண்டு கைகளிலும் மாற்றி செலுத்திக் […]

You May Like