சென்னை காவல்நிலையத்தில் அண்ணன் விசாரணைக்கு சென்ற தங்கையை காவலர்கள் அடித்த போது அந்த பெண் வலிப்பு வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

நேற்று சமூக வலைதளங்களில் காவல் நிலையத்தில் ஒரு பெண் வலிப்பால் கீழே படுத்து துடித்து கொண்டிருக்கும் வீடியோ வெளியானது. வெளியே உறவினர்களின் கதறல் சத்தமும் கேட்கிறது. பின்பு விசாரித்ததில் இந்த சம்பவம் சென்னை பாரிஸ்முனை காவல் நிலையத்தில் அரேங்கேறியிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த பெண்ணின் பெயர் காவேரி(25). அவரது அண்ணன் நடத்தும் பழக்கடையை முறையாக நடத்தவில்லை என கூறி காவலர்கள் கூறியுள்ளனர். அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இடையில் காவேரி அண்ணனுக்கு ஆதவராக காவலர்களை எதிர்த்து பேசியுள்ளார். இவரையும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு காவலர்கள் காவிரியை அடித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரம் கேவேரிக்கு வலிப்பு ஏற்ப்பட்டு துடித்துள்ளார். இதனால் காவலர்கள் அந்த பெண்ணை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என தெரியவந்துள்ளது.