அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

மகளிர் தினத்தன்று மட்டும், பெண்களை கொண்டாடினால் போதுமா..?

womens day

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. ஆணாதிக்க சமூகத்தில் இருந்து பெண்களுக்கான சுதந்திரத்தை, உரிமையை வென்றெடுத்த நாள் என்று கூட இந்த நாளை சொல்லலாம். இந்த நாள் கூட அவ்வளவு எளிதில் கிடைத்துவிட வில்லை. பல நாடுகளில் பல்வேறு காலக்கட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாகவெ இன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் தினம் எப்படி உருவானது என்பது தொடங்கி தற்போதைய நவீன காலக்கட்டத்தில் பெண்களின் நிலை எப்படி உள்ளது என்பது வரை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

womens day history

18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டுவேலைகளை செய்வதற்காக மட்டுமே பெண்கள் பயன்படுத்தப்பட்டனர். பெரும்பாலான பெண்களுக்கு தொடக்க கல்வி கூட மறுக்கப்பட்டது. பின்னர் 1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வழங்கப்பட்டது.

ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. எனவே ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். எனினும் அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம ஊதியம், சம உரிமை, பாலின சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தி 1907-ம் ஆண்டில் இருந்து மீண்டும் பெண்கள் போராடத் தொடங்கினர். 1910 ம் ஆண்டு, டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் , உலக சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டில் கலந்து கொண்ட கம்யூனிஸ்ட் தலைவர், கிளாரா ஜெட்கின் , பெண்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு தினத்தை கடைப்பிடிக்க வேண்டும். மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப் பட வேண்டும் என்று வலியுறுத்தினார். எனினும் பல்வேறு தடைகள் காரணமாக அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

history of womens day

எனினும் பல்வேறு நாடுகளில் பல்வேறு தினங்களில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடைபெற்ற பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா என்ற பெண்மணி, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதனைத்தொடர்ந்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1977-ம் ஆண்டு முதல் ஐ.நா சபை மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறது.

womens day

1910 காலக்கட்டத்தில் பெண்கள் எதற்காக போராடினார்களோ அந்த நோக்கம் நிறைவேறியதா என்று கேட்டால் இல்லை என்பதே பதில். ஆம்.. பெண்கள் பாலின சமத்துவத்திற்காகவும், சம உரிமைக்காகவும் போராடினர். ஆனால் தற்போது பல்வேறு துறைகளில் பெண்களில் பல சாதனைகளை புரிந்துவருகின்றனர். பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை என்று கூறும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கூட உலகின் ஏதோ ஒரு மூலையில், ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி வருகிறாள்.

women crime sillhoute

பல்வேறு நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் பெண்கள் இருந்தாலும், ஏதோ ஒரு இடத்தில் பணியிடங்களில், தற்போது கூட சம உரிமைக்காக போராடி வருகிறாள். ஆண்களுக்கு நிகராக பெண்களும் படித்துவிட்டு வேலைக்கு சென்றாலும், ஏதோ ஒரு இடத்தில் தற்போது வரை வீட்டு வன்முறையில் மன ரீதியிலும், உடல் ரீதியிலும் பாதிக்கப்படுகிறாள். நவீன காலத்தில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்ததோ., அதே அளவுக்கு பெண்களுக்கு அச்சுறுத்தல்களும் அதிகமாகி உள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக சமூக வலைதளங்களை சொல்லலாம். சமூக வலைதளம் மட்டுமல்ல, எந்த ஒரு தொழில்நுட்ப வசதியிலும், நேர்மறை அம்சங்களும் இருக்கும், எதிர்மறை அம்சங்களும் இருக்கும். எனவே சமூக ஊடகங்களை பெண்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் கையாள வேண்டும். குடும்ப விவரங்கள், சுய விவரங்கள் அனைத்தையும் முழுமையாக அவற்றில் பதிவிடக் கூடாது.

முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தங்களை பற்றிய முழு விவரத்தை சொல்லக் கூடாது. பெண்கள் சமூக அச்சம், குடும்ப மானம் என மறைமுகமான அச்சுறுத்தல்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இந்த காரணங்களால் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் கூட அதனை வெளியில் கூறமாட்டார்கள். எனவே ஏதாவது பிரச்சனை வந்தால் அதுகுறித்து புகாரளிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

woman

பெண்களுக்கு எதிரான உடல் ரீதியிலான, மன ரீதியிலான வன்முறைகள் ஒருபுறம் என்றால், பிறக்கும் போதே பெண் சிசுவை கொல்ல துணியும் பெற்றோர்களும் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். சமீபத்தில் மதுரையில் நடந்த பெண் சிசுக் கொலை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படி பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு இன்னல்களை சந்தித்து, அதனை தகர்த்து வெற்றி நடைபோடும் பெண்களுக்கென்று ஒரு தினம் கொண்டாடப்படுவதை எண்ணி மகிழ்ச்சியடைவதா அல்லது பெண்களை தினத்தை தவிர மற்ற தினங்களில் பெண்களுக்கு நடைபெறும் அநீதிகள் குறித்து கவலை கொள்வதா என்று தெரியவில்லை.

வருடத்தின் 364 நாட்களும் பெண்களுக்கு எதிரான அநீதிகளும், வன்முறைகளும், அடக்கு முறைகளும், கொடுமைகளும் அரங்கேறும் இதே சமூகத்தில் தான் இன்று ஒரு நாளில் மட்டும் பெண்கள் கொண்டாடப்படுகிறார்கள்.. ஆனால் மகளிர் தினத்தன்று மட்டும், பெண்களை கொண்டாடினால் போதுமா..? வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களிலும், சமூக வலைதளங்களில் மட்டும் பெண்களை போற்றினால் போதுமா..? பெண்களை சமமாக நடத்தி, அவர்களுக்கான உரிமைகளை கொடுத்து, அவளையும் ஒரு சக மனிதியாக மதித்தாலே போதும்.. ஒவ்வொரு நாளுமே பெண்கள் தினம் தான்…

1newsnationuser1

Next Post

“டிவிட்டரில் இருந்து வெளியேறுகிறேன்..” தனது சமூக வலைதளப் பக்கங்களை 7 சாதனை பெண்களிடம் ஒப்படைத்த மோடி..

Sun Mar 8 , 2020
மகளிர் தினமான இன்று, தனது சமூக வலைதள பக்கங்களை 7 சாதனைப் பெண்களிடம் பிரதமர் மோடி ஒப்படைத்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்..! எங்கள் பெண்களின் உற்சாகம் மற்றும் சாதனைகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். நான் சில நாட்களுக்கு முன்பு கூறியபடி, நான் ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன். இன்றைய நாள் முழுவதும், ஏழு சாதனைப் பெண்கள் தங்களின் சாதனைகளையும், வெற்றிப் பயணங்களையும் […]
மோடி

You May Like