அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

இந்த நாளில் குடும்பத்துடன் இவரை மட்டும் வழிபடுங்கள்… சங்கடங்கள், கவலைகள் அனைத்தும் நீங்கும்!

சரஸ்வதி பூஜை அன்று, விரதம் இருந்து வழிபட்டால் வாழ்க்கையில் சங்கடங்கள், கவலைகள் அனைத்தும் நீங்கும்.

இந்த நாளில் குடும்பத்துடன் இவரை மட்டும் வழிபடுங்கள்... சங்கடங்கள், கவலைகள் அனைத்தும் நீங்கும்!

நவராத்திரி என்பது பெண்களுக்கான மிக முக்கியமான பண்டிகை. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பெண்கள் குழுவாகக் கூடி, பெண் தெய்வங்களை ஆராதிப்பதுதான் நவராத்திரி வைபவத்தின் தாத்பரியம். ஒன்பது நாட்களும் பெண்கள் பூஜித்து வழிபடுகிறார்கள். பத்தாம்நாள் குடும்பமாக எல்லோருமே வழிபடவேண்டும். அதுதான் சரஸ்வதி பூஜை. விஜய தசமித் திருநாள். சகல யோகங்களும் தரும் சரஸ்வதி பூஜை நன்னாளில், வீடுகளிலும் அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து ஸ்ரீசரஸ்வதிதேவியை வழிபடுவது வழக்கம்.

kolu 1 1

நவராத்திரியில் தினமும் வீட்டில் அம்பாள் வழிபாடு செய்யவேண்டும். கொலு வைத்திருப்பவர்கள் வீடுகளுக்குச் சென்று அங்கே நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ளவேண்டும். சில வீடுகளில், ஒன்பதுநாளும் அணையா விளக்கு ஏற்றி வைத்து பூஜையறையில் வைத்து வணங்குவார்கள். சரஸ்வதி பூஜையன்று எல்லோரும் சேர்ந்து வணங்கவேண்டும்.

kolu

சரஸ்வதி பூஜைக்கு முதல்நாள், பூஜை செய்யும் இடத்தை கழுவி, துடைத்து சுத்தம் செய்யவேண்டும். லேசாக சந்தனம் தெளிக்கவேண்டும். குங்குமம் இடவேண்டும். ஸ்ரீசரஸ்வதிதேவியின் திருவுருவப் படத்துக்கோ அல்லது சிலைக்கோ… படைப்பதற்கு வைக்கவேண்டிய குழந்தைகளின் புத்தகங்கள், பேனா ஆகியவற்றுக்கு சந்தனம் குங்குமம் இடவேண்டும். அடுத்து, அம்பாளுக்கும் புத்தகங்களுக்கும் பூக்களைச் சொரியவேண்டும். மாலை அணிவித்து அன்னையை அலங்கரிக்கவேண்டும்.

நைவேத்தியத்துக்காகப் படைக்கப்படும் உணவை, இலையில் வைத்துக் கொள்ளுங்கள். சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைப்பது மிகவும் உகந்தது. மேலும், பொரி, கடலை, அவல், நாட்டுச் சர்க்கரை மற்றும் பழங்களையும் படையலுக்கு வைத்துக்கொள்ளுங்கள்.

sarashvathi pooja books

செம்பருத்தி, ரோஜா, செவ்வரளி, வெண்தாமரை முதலான மலர்களை அன்னை சரஸ்வதிதேவிக்கு பயன்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாக முதலில், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் செய்துவிட்டு, கலைவாணியைப் பூஜித்து ஆராதிக்கவேண்டும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வழிபட முடியாதவர்கள் சரஸ்வதி பூஜை நன்னாளில் விரதம் இருந்து வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களும் சங்கடங்களும் கவலைகளும் நீங்கும்.

1newsnationuser6

Next Post

உலகின் மர்மமான கப்பலின் திகிலூட்டும் கதை.. அதனை பேய்க் கப்பல் என்று கூற காரணம் என்ன..?

Tue Oct 20 , 2020
உலகில் கப்பல்களை பற்றிய பல மர்மமான கதைகள் உள்ளன. அவற்றின் ரகசியங்கள் இன்றுவரை அறியப்படவில்லை. இதுபோன்ற ஒரு மர்மமான கப்பலைப் பற்றி இன்று நாம் பார்க்கப் போகிறோம். அதன் தனித்துவமான சம்பவம் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த சம்பவம் மிகவும் பழைமைவாய்ந்ததல்ல என்றாலும், அது கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. 1947 ஜூன் மாதம் நடந்த சம்பவம் தான் இது. அந்த நேரத்தில், பல கப்பல்கள் மலாக்கா வளைகுடாவில் […]
மர்ம

You May Like