அரச மரத்து இலைகளை வைத்து செய்யப்படும் கர்ம வினை தீர்க்கும் பரிகாரம்..! முழு விவரம்..!

நம் முந்தைய ஜென்மங்களில் செய்த பாவங்களும், நன்மைகளும் ஏழேழு ஜென்மங்களுக்கும் கர்மாவாக தொடர்ந்து நம்மை பின்பற்றி வரும். இதையேதான் கர்ம வினை என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னதான் பலருக்கும் பல நன்மைகள் தொடர்ந்து செய்து வந்தாலும் கெட்டது மட்டுமே நடக்கிறதா அப்படி என்றால் கர்மவினை பலனை அடைகிறீர்கள் என்று அர்த்தமாகும்.

மேலும் கர்ம வினைகளை நீக்கும் சக்தி கொண்டவர் விநாயகர். இவர் முன் ஜென்மங்களில் செய்த பாவங்களை நீக்கி நமக்கு மோட்சம் அளிப்பார் என்று நம்பப்பட்டு வருகிறது. விநாயகரை எப்படி வழிபட்டால் கர்மவினை நீங்கும் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

விநாயகரின் மறு உருவமான அரச மரத்தின் இலைகளை பறித்து அரசமரத்து விநாயகருக்கு வேண்டுதல் செய்தால் வேண்டியவைகள் யாவும் கண்டிப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் அரச மரத்து இலைகளை வைத்து செய்யப்படும் இந்த கர்ம வினை தீர்க்கும் பரிகாரமும், கர்ம வினையை தீர்க்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.

முதலில் அரசமர இலையை பறித்து நன்றாக சுத்தம் செய்து தாம்பூல தட்டில் விநாயகருக்கு முன்பாக வைக்க வேண்டும். தாம்பூல தட்டிற்கும் அரச மர இலைக்கும் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். பின்பு அந்த இலையில் அகல் விளக்கு வைத்து மஞ்சள்நிற திரியிட்டு விளக்கு பொருத்த வேண்டும். இந்த விளக்கை வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பொருத்தி விநாயகருக்கு ஆராதனை செய்து வந்தால் கர்ம வினை நீங்கி வாழ்வில் எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும்.

1newsnationuser5

Next Post

திமுக ஆட்சியில் ஊழலில் மட்டும் கவனம்!… ரூ.10.76 லட்சம் கோடி மத்திய அரசு நிதி!… அண்ணாமலையின் புள்ளிவிவரம்!

Sat Feb 10 , 2024
சென்னை:’மத்திய பா.ஜ., ஆட்சியில், தமிழகத்திற்கு திட்டங்கள், உதவி தொகை, நிதி பங்கீட்டின் மதிப்பு என, 10.76 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நிர்வாக குளறுபடிகளால், பொதுமக்கள் தி.மு.க., அரசின் மீது கடும் கோபத்தில் இருப்பதை திசை திருப்ப, ஏற்கனவே பல முறை தெளிவுபடுத்திய, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்களில், மீண்டும் ஒரு முறை பொய் கூறியிருக்கின்றனர். ஆட்சியில் […]

You May Like