Wow..! இனி, இன்டர்நெட் இல்லாமலே டிஜிட்டல் பேமெண்ட் செய்யலாம்.. புதிய திட்டம் தொடக்கம்..

தற்போது அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.. குறிப்பாக வங்கி தொடர்பான பணிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவையும் குறைந்துவிட்டது.. இண்டெர்நெட் பேக்கிங், யுபிஐ ஆகிய முறைகளில் ஆன்லைனில் எளிதாக பண பரிமாற்றம் செய்ய முடிகிறது.. ஆனால் அதற்கு இணைய வசதி தேவை.. இந்நிலையில் இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC, ஆஃப்லைன் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் திட்டத்தை முதல்கட்டமாக தொடங்கி உள்ளது..

ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..! 100 பேரின் வங்கிக் கணக்கில் ரூ.13 கோடி..!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஒழுங்குமுறை சாண்ட்பாக்ஸ் திட்டத்தின் கீழ், HDFC வங்கி Crunchfish உடன் இணைந்து OfflinePay திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்கள், இனி பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் மொபைல் நெட்வொர்க்கைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. கிராமப்புற நகரங்கள் மற்றும் சிறிய கிராமங்கள் உட்பட மோசமான மொபைல் நெட்வொர்க் கவரேஜ் உள்ள பகுதிகளில் டிஜிட்டல் பணம் செலுத்துவதை இந்த திட்டம் எளிதாக்கும் என்று கூறப்படுகிறது..

பொதுவாக வர்த்தக கண்காட்சிகள் மற்றும் கண்காட்சிகள் போன்ற பெரிய நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் மொபைல் நெட்வொர்க் ட்ராஃபிக் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த OfflinePay திட்டத்தின் மூலம் கூட்ட நெரிசல் உள்ள இடங்களிலும் இனி ரொக்கமில்லா பரிவர்த்தனைகளுக்கு வசதியாக இருக்கும்.. டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர், இணைய வசதி உடன் மட்டுமே அதை மேற்கொள்ள முடியும்.. ஆனால் மோசமான இணைய இணைப்பு உள்ள பகுதிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்துவது கடினமாக இருக்கும்.. இருப்பினும், HDFC வங்கியின் “OfflinePay ” என்ற திட்டம், வணிகர் மற்றும் வாடிக்கையாளர் இருவரையும் இணைய இணைப்பு இல்லாமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும்.

இந்த OfflinePay திட்டம் இந்தியா முழுவதும் 16 நகரங்களில் முதல்கட்டமாக 4 மாத சோதனைக் கட்டத்தில் செயல்படுத்தப்படும்.. முதல்கட்டமாக OfflinePay மூலம் 200 ரூபாய் மட்டுமே செலுத்த முடியும்.. அண்டர் கிரவுண்ட் மெட்ரோ நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், சில்லறை விற்பனைக் கடைகள், விமானங்கள், ரயில்கள் போன்ற ஆஃப்லைன் பணம் செலுத்தலாம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் HDFC வங்கி மற்றும் Crunchfish உருவாக்கிய செயலிக்கு RBI ஒப்புதல் அளித்தது. இந்த முன்னோடி திட்டம் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், நாட்டில் ஆஃப்லைன் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை பரவலாக ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும். இதுபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய நாட்டின் முதல் வங்கி HDFC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

கண் முன்னே விஷமறுந்தி தற்கொலை செய்து கொண்ட விவசாயி….! வேடிக்கை பார்த்த காவல்துறை….!

Tue Feb 14 , 2023
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விவசாயத்திற்கு இயன்ற சூழ்நிலையும், தட்பவெப்ப நிலையும், விவசாயம் செய்வதற்கான நிலமும் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு உணவளிக்கும் விவசாயியையும் சரி, விவசாயத்தையும் சரி யாருமே மதிப்பதில்லை.வடமாநிலங்களில் சென்று பார்த்தால் விவசாயம் என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கிறது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் கோதுமை விளைச்சல் நன்றாக இருக்கிறது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், விவசாயத்தை யாருமே பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த விவசாயம் முற்றிலுமாக அழிந்து […]

You May Like