அண்ணன்-தங்கை காதல்..! பெற்றோர் எதிர்த்ததால் தூக்கிட்டு தற்கொலை.! கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்.!

கர்நாடக மாநிலத்தில் காதல் வயப்பட்ட இருவர், உறவு முறையால் அண்ணன்-தங்கை என்பதால் இரு வீட்டினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தங்களது தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக எடுத்து, வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டம் யாத்ரமி தாலுகா மாகனகெரே கிராமத்தில் கொல்லப்பா (24) என்பவர் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தனது உறவினரான, சசிகலா (20) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் உறவு முறையில் அண்ணன்-தங்கை என்பதால் இரு வீட்டினரும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.

சசிகலாவின் பெற்றோர், அவருக்கு அறிவுரைகள் வழங்கி, வேறொருவரை மணப்பதற்கு சம்மதிக்க வைத்தனர். விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள சிந்தகி கிராமத்தை சேர்ந்த ஒரு நபருடன் சசிகலாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்நிலையில் கொல்லப்பாவும், சசிகலாவும் வீட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பெற்றோர்கள் தங்களை பிரித்து விடக்கூடும் என்று பயந்த இந்த ஜோடி, தங்கள் காதலைப் பற்றியும், தங்கள் தற்கொலைக்கான காரணங்களை பற்றியும் வீடியோ ஒன்றை எடுத்து, அதனை வாட்ஸ்அப் மூலம் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர். பின்னர் கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதைக் கண்ட இருவரது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யாத்ரமிகி போலீசார், இறந்தவர்களது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

கடவுள் சிலை இல்லாமல் வழிபாடு நடக்கும் திருக்கோயில்.? இந்த அதிசய கோயில் எங்கு உள்ளது.?

Sun Feb 4 , 2024
பொதுவாக இந்து மத தர்மத்தின் படி கோயில்கள் என்றாலே சிலை வைத்து வழிபாடு செய்வது தான். ஆனால் சிலை இல்லாமலேயே வழிபாடு நடக்கும் ஓர் அதிசய திருக்கோயில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. கேரளாவில் மஞ்ஜப்புரா என்ற பகுதியில் உள்ள அம்பாடாத்து மாளிகா ஐயப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஐயப்பனின் சிலை இல்லாமலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் ஐயப்பனின் சிலைக்கு பதிலாக வெள்ளி முத்திரையிலான தடி, திருநீற்றுப்பை, கல் போன்றவற்றை […]

You May Like