உடலை ஆரோக்கியமாகவும் மன அமைதி பெறவும் யோகா அணைத்து வயதினருக்கும் உறுதுணையான ஒன்று. இந்த ஊரடங்கில் பலரும் தங்கள் உடல்நலனில் கவனம் கொண்டுள்ளனர். இயற்கை உணவுகள், உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஆனால் ஊரடங்கால் வெளியில் சென்று முறையாக கற்றுக்கொண்டு செய்ய முடியாத சூழலில் இணையத்தின் மூலம் கற்றுகொண்டு பயிற்சி செய்கின்றனர். ஆனால் யோகாவில் முறையான நடத்துதல் இல்லாத போது சில தவறுகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. அவை என்ன என்பதில் சிலவற்றை இங்கு காணலாம்.
- பாடல், இனிய இசை கேட்டுக்கொண்டே யோகா செய்வதால் சிலர் மன அமைதி கிடைக்கும் என நினைகின்றனர். ஆனால் யோகாசனம் செய்யும் போது உடலும் மனமும் ஒருநிலைப்பட்டு அமைதி ஏற்ப்பட வேண்டும். இசை ஒலிக்கும் போது நமது நினைவுகள் இசையில் மூழ்க வாய்ப்புள்ளது. இதனால் யோகாவின் பலன் முழுமையாக கிடைக்காமல் போக நேரிடும்.

- பெரும்பாலும் அனைவரும் அதிகாலை எழுந்து யோகா மேற்கொள்ள முடிவதில்லை. இருப்பினும் உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் யோகா செய்ய கூடாது. யோகாவுக்கும் உணவுக்கும் இடையில் சுமார் இரண்டு மணி நேரம் இடைவெளி தேவை.
- மாதவிடாய் காலத்தில் யோகாசனத்தை 3 நாட்கள் தவிர்க்கலாம். மேலும் சில நாட்கள் நீடிக்கும் போது உடல் தலைகீழாக வரும் ஆசனங்களை தவிர்க்கவும். உடல் தலைகீழாக இருக்கும் ஆசனங்களால் உடலில் அதிக வெப்பம் ஏற்ப்படும். இதானால் பெண்களுக்கு சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் பட்டர்ஃபிலை ஆசனம் மாதவிடாய் நாளில் ஏற்படும் வலியை குறைக்க உதவும்.

- பிராணயாம மூச்சு பயிற்சியை கர்ப்பிணி பெண்கள் மேற்கொள்ள கூடாது. அல்சர் போன்ற வயிற்றில் புண் உள்ளவர்கள் கட்டாயம் பிராணயாம பயிற்சியும், கபால பாத்தி பயிற்சியும் மேற்கொள்ள கூடாது. இதற்கு பதில் எளிதான ஆசனங்கள் மூலம் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.
- இருதய பிரச்சனை உள்ளவர்கள் உடலை பின்பக்கம் வளைக்கும் முறை உள்ள ஆசனங்களை தவிர்க்க வேண்டும்.

- எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் யோகா செய்ய கூடாது. இருப்பினும் ஆர்வம் உள்ள குழந்தைகள் சில எளிய ஆசனங்களை பெற்றோர், ஆசிரியர்கள் கண்காணிப்பில் செய்யலாம்.