மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆகம ஆசிரியர் பணி.. யாரெல்லாம் விண்ணப்பிக்ககூடாது..?

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் பள்ளிக்கு ஆகம ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகம் முழுவதும் கடந்த 2007-ம் ஆகம் ஆசிரியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.. ஆனால் சிவாச்சாரியார்கள் தொடர்ந்து வழக்கு காரணமாக 2008-ம் ஆண்டு அந்த பள்ளிகள் மூடப்பட்டன.. இதனிடையே மீண்டும் அர்ச்சகர் பள்ளிகளை திறக்க 2015-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளேயே அர்ச்சகர் பள்ளி புனரமைக்கப்பட்டது..

இந்நிலையில் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்றுவிப்பதற்கு ஆகம ஆசிரியர்கள் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.. அதன்படி விண்ணப்பதாரர்கள், இந்து மதத்தை சார்ந்தவர்களாகவும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.. தண்டனை பெற்றவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், கோவிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் உள்ளிட்டோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் கோவில் துணை ஆணையரின் முகவரிக்கும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

’முடிந்தால் தனது ஆட்சியை கவிழ்க்கட்டும்’..! தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சவால்..!

Mon Jul 4 , 2022
பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்காத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முடிந்தால் தனது ஆட்சியை கவிழ்க்கட்டும் என்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சவால் விடுத்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்த பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேரில் வரவேற்கவில்லை. சந்திரசேகர ராவ்வின் இந்த செயலுக்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. […]
’முடிந்தால் தனது ஆட்சியை கவிழ்க்கட்டும்’..! தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சவால்..!

You May Like