ரேஷன் கார்டு இருந்தால் போதும்…. நீங்க இலவச கேஸ் சிலிண்டர் பெறலாம்…! எப்படி பெறுவது தெரியுமா…? முழு விவரம் உள்ளே…

ரேஷன் அட்டை வைத்திற்கும் நபர்களுக்கு தற்போது ஒரு வருடத்தில் 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் வாய்ப்பை உத்தரகண்ட் மாநில பெற்றுள்ளனர். அரசின் இந்த முடிவால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அதன் பலனை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். நீங்கள் அந்தியோதயா திட்ட பயனாளியாக இருந்தால், உங்களுக்கு அரசால் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

சிலிண்டருக்கு மானியத் தொகை வருகிறதா? இல்லையா? எப்படி தெரிந்து கொள்வது? இதோ விவரம் உள்ளே..!

இது குறித்து உத்தரகண்ட் மாநில முதலவர் புஷ்கர் சிங் தாமி அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, ரேஷன் அட்டை வைத்திற்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சாமானியர்களுக்குத்தான் பலன் கிடைக்கும். இந்த அறிவிப்புடன், அதில் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் உள்ளன. அதன்படி, பயனாளி உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருப்பது கட்டாயமாகும். இதற்கு அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் கேஸ் இணைப்பு அட்டையுடன் இணைப்பது அவசியம்.

இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்கள் அந்தியோதயா அட்டையை இந்த மாத இறுதிக்குள் இணைக்கவும். இணைக்கவில்லை என்றால், அரசின் இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்தில் இருந்து நீங்கள் பயன்பெற முடியாது. மாவட்ட வாரியாக அந்தியோதயா நுகர்வோர் பட்டியல் உள்ளூர் கேஸ் ஏஜென்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தியோதயா கார்டு வைத்திற்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கேஸ் இணைப்பை இணைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசின் இந்த முடிவிற்குப் பிறகு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் அந்தியோதயா அட்டைதாரர்கள் பலனை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “சூப்பர் நியூஸ்” இனி தமிழக அரசு பேருந்தில் சுமை பெட்டி வாடகை திட்டம்‌…! போக்குவரத்து அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

Vignesh

Next Post

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா பாசிட்டிவ்... வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்..

Thu Jul 14 , 2022
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. மேலும் சராசரியாக 4 மாதங்களுக்கு ஒருமுறை […]
’நாடாளுமன்ற தேர்தலில் பாமக தலைமையில் புதிய கூட்டணி’..! - மாநில பொதுச்செயலாளர்

You May Like