PM Kissan திட்டத்தில் உங்களுக்கு ரூ.2,000 பணம் வரவில்லையா…? வரும் 16-ம் நடைபெறும் சிறப்பு முகாம்…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிப்ரவரி 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 16.02.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (one time password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம்.

மேலும் பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது கைபேசியில் வைத்துள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

எனவே. பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறும், பி.எம். கிசான் திட்டத்தில் இதுவரை பயன் பெறாத விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி இத்திட்டத்தில் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

மீண்டும் அதிகரிக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு!… 14 ஆயிரம் பறவைகள் அழிப்பு!

Tue Feb 13 , 2024
ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து 3 கி.மீ முதல் 10 கி.மீ வரையுள்ள 15 பண்ணைகளில் வளர்க்கப்படும் சுமார் 3,63,000 கோழிகள் மற்ற இடங்களுக்கு கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட பறவைகளை அடக்கம் செய்வதும், கோழிப்பண்ணைகளைச் சுத்தம் செய்யும் பணிகளும் அடுத்த […]

You May Like