இளம் வயது ஆண்களே பாலியல் வன்கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.. எந்த நாட்டில் தெரியுமா..?

நியூசிலாந்தில் பெண்களை விட இளம் வயது ஆண்களே பாலியல் பலாத்காரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

2020 மற்றும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பாலியல் பலாத்காரம் குறித்து 618 புகார்கள் கிடைத்துள்ளதாகவும், அதில் பாதிக்கப்பட்டவர்களில் 54% பேர் 25 வயதுக்குட்பட்ட ஆண்களாக இருப்பதாகவும் நியூசிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்த சூழலில் நியுசிலாந்து காவல்துறையினர் இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.. எனினும் மேலும் பலர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருக்கலாம் என்றும், ஆனால் குற்றத்தை புகாரளிக்க இன்னும் முன்வரவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இளம் வயது ஆண்களை குறிவைத்து பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.. பெரும்பாலான பாலியல் குற்றங்கள் ஆன்லைனில் நடப்பதாக கூறப்படுகிறது.. துப்பறியும் அதிகாரி டான் ரைட் இதுகுறித்து பேசிய போது “ குற்றவாளிகள் பொதுவாக வெளிநாட்டில் இருப்பார்கள்.. பாதிக்கப்பட்டவர்களின் நிர்வாண புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்பி குற்றவாளிகளி அவர்களை மிரட்டுகின்றனர்.. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் தாங்கள் குற்றம் செய்தவர்கள் இல்லை என்பதையும், அவர்களுக்கு உதவி கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்வது முக்கியம்..” என்று தெரிவித்தார்..

ஆன்லைன் பாலியல் குற்றங்களில் சிக்காமல் எப்படி தப்பிப்பது..? டேட்டிங் செயலியில் ஒருவரை சந்திக்கும் போது, அவர் வேறு தளத்தில் உரையாடலை தொடர சொன்னால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. அதே போல், வீடியோ அழைப்புகள் அல்லது அரட்டைகளுக்கு வெப்கேம் அல்லது மைக்ரோஃபோன் வேலை செய்யவில்லை என்று மற்ற நபர் கூறினால் கவனம் தேவை..

Maha

Next Post

தமிழகத்தில் சட்டப்பிரிவு 356...! பிரதமர் மோடி பேசிய 5 முக்கிய விஷயம்...! என்னென்ன தெரியுமா...?

Fri Feb 10 , 2023
நேருவின் பெயரை பயன்படுத்துவதில் என்ன தயக்கம் என பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பினார். மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய பிரதமர் மோடி; இந்தியாவில் பத்து ஆண்டுகளாக பழங்குடியின சமுதாயத்தினரின் மேம்பாடு புறக்கணிக்கப்பட்டது. அவர்களது நலனுக்கு நாங்கள் உயர் முன்னுரிமை வழங்கினோம். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில்தான் பழங்குடியினர் நல அமைச்சகம் என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டதாக […]

You May Like