தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

பசியால் 100-க்கு போன் செய்த இளைஞர்கள்… போலீசார் உதவிய வீடியோ காட்சி வைரல்…

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை பிறபித்த நிலையில், டெல்லியில் வேலையில்லாமல் உணவின்றி 100க்கு போன் செய்த இளைஞர்களுக்கு போலீசார் உதவிய வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

delhi police food

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலகெங்கும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து மக்களும் வீட்டிலேயே முடங்கினர். இருப்பினும், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் வேலையின்றி வருமானம் இல்லாமல் பாதித்து வருகின்றனர். மேலும், தெருவோரம் வசிப்பவர்கள், ஆதரவற்றோர்கள் ஆகியோர் உணவின்றி தவித்துவருகின்றனர்.

இதனால் தன்னார்வலர்கள் ஆங்காங்கே உணவு விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒருசில இடங்களில் வேலையின்மையால் கூலித்தொழிலாளர்களும் அவதியுற்று வருகின்றனர். அந்த வகையில் முஹம்மது, பிரசாத் என்னும் இளைஞர்கள் இருவர் பசிக்கொடுமையால் 100-க்கு போன் செய்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. அந்த இளைஞர்கள் டெல்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் தற்காலிகமாக அவர்கள் வேலை செய்த நிறுவனம் செயல்பாட்டை நிறுத்தியுள்ளது.

இதனால் நான்கு நாட்களாக இருவரும் உணவுக்கு மிகுந்த சிரமப்பட்டுள்ளனர். அவர்கள் கையில் வைத்திருந்த பணத்தையும், பிஸ்கட் வாங்கி சாப்பிட்டு, தண்ணீர் குடித்து பசியை ஆற்றியுள்ளனர். பணம் தீர்ந்து போனதால் செய்வதறியாது 100க்கு போன் செய்து தங்களின் நிலையை எடுத்து கூறியுள்ளனர். உடனடியாக டெல்லி போலீசார், அவர்களின் நிலையை நேரில் சென்று உறுதி செய்த பின்னர், அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளனர். மேலும், அவர்களுக்கு 1000 ரூபாய் பணமும் அரிசி,பருப்பு போன்ற மளிகை பொருட்களை வாங்கிக் கொடுத்தும் போலீசார் உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டெல்லி காவல்துறை உதவி ஆணையாளர் கூறுகையில், பணம் இல்லை என்று தெரிந்ததும் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபடாமல் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டதை வரவேற்கிறேன் என தெரிவித்து உள்ளார். அவர்களுக்கு போலீசார் உதவி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

1newsnationuser2

Next Post

சானிடைசரை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த இளைஞர்கள்... 1500க்கும் மேற்பட்ட சானிடைசர், முகக்கவசங்கள் பறிமுதல்...

Sat Mar 28 , 2020
சென்னையில் மொத்தமாக சானிடைசர்கள், முகக்கவசங்களை வாங்கி பதுக்கி வைத்து 144தடைக்கு பிறகு அதிக விலைக்கு விற்பனை செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், முகமது நிஜாம் ஆகியோர் 144 தடை உத்தரவுக்கு முன்பாகவே, மொத்தமாக சானிடைசர்கள், முகக்கவசங்களை வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். பின்னர் தடை உத்தரவையடுத்து, வாட்ஸப் குழு மூலம் அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர். மக்களும் வேறு வழியின்றி வாங்கி கொண்டிருந்தனர். […]
youth-hoarding-sanitizer-mask-in-highly-sell

You May Like