சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

கன்னியாகுமரி: அண்ணனை காதலித்து கர்ப்பமான 17 வயது சிறுமி

கன்னியாகுமரியில் அண்ணன் உறவுமுறை கொண்டவனுடன் நெருங்கிப்பழகி கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.

images 55

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி அடுத்த மணக்கரை என்ற கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, குளச்சல் மகளிர் காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த போலீசார் சிறுமியையும், அவரது அம்மாவையும் விசாரித்துள்ளனர்.

இதில், அந்த சிறுமி அவர்களது பக்கத்து வீட்டில் இருந்த அண்ணன் உறவு முறையான சஞ்சீவி என்ற 19 வயதான இளைஞருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆர்ட்ஸ் காலேஜில் 2-ம் வருடம் படித்து வருகிறார்.. கடந்த ஜனவரி மாதத்தில் ஒருநாள், உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்.. யார் எதிர்த்தாலும் சரி, உன்னையே கல்யாணம் செய்வேன்” என்று சொல்லியே சிறுமியை வலையில் வீழ்த்தி உள்ளார்.

images 56

அந்த பேச்சில் மயங்கிய சிறுமியும் இளைஞரை விரும்ப ஆரம்பித்து ஒன்றாக சேர்ந்து பல இடங்களுக்கு சென்று, பலமுறை இருவரும் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரையும் அழைத்து கூப்பிட்டு கண்டித்து உறவுமுறையை எடுத்து சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனாலும் இருவரும் திருட்டு தனமாக பழகி வந்துள்ளனர். பலமுறை வீட்டில் ஆள் இல்லாத சமயங்களில் சஞ்ஜீவ்வை வீட்டுக்கு அழைத்துள்ளார் சிறுமி. இறுதியில்தான் மகள் கர்ப்பம் என்று பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து கருக்கலைப்பு செய்வதற்காக பரசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அங்கு கருக்கலைப்பு செய்ய முடியாது அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளனர்.

இதையடுத்து, சிறுமியின் கரப்பத்திற்கு காரணமான சஞ்ஜீவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து, சிறுமியின் தாயாரிடம் தொடர் விசாரணை நடந்த வருகிறது.

1newsnationuser4

Next Post

#BreakingNews : தமிழகத்தில் 25,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடுவதால் அச்சம்..

Wed Jun 3 , 2020
தமிழகத்தில் இன்று 1,200 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.000-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சில நாட்களாகவே, தினமும் சராசரியாக 700-க்கும் மேற்பட்டோருக்கு […]
coronaindia south

You May Like