இளைஞர்களே..!! நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! எங்கு தெரியுமா..?

விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனம் தாலுகா பேரணி கிராமத்தில் நாளை நடைபெறவுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம் மற்றும் உறுப்பு சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து தனியார் றை வேலைவாய்ப்பு முகாம் திண்டிவனம் தாலுகா பேரணி கிராமத்தில் உள்ள தூய இருதய கலை அறிவியல் கல்லூரியில் நாளை (பிப்.13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் 8, 10, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுனர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி (04146-226417), 9499055906 என்ற எண்களிலோ தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser6

Next Post

1,400 பேர் லிஸ்ட் ரெடி..!! ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் எடுத்த முடிவு..!! ஊழியர்கள் அதிர்ச்சி..!!

Mon Feb 12 , 2024
‘ஸ்பைஸ்ஜெட்’ விமான நிறுவனம் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 9,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 30 விமானங்கள் இயக்கத்தில் உள்ளன. இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீதமாகும். இந்த நடவடிக்கையானது செயல்பாட்டு செலவுகளைக் குறைப்பதற்காகவும், […]

You May Like