fbpx

திறமைக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை! ஃபேவரைட்டிசமுக்கு தான் வாய்ப்பு-மனம் திறந்த நடிகை…

திரைத்துறையில் திறமைக்கு என்றுமே வாய்ப்புகள் கிடைப்பதில்லை என ஓபனாக தெரிவித்த நடிகை பரினீதி சோப்ரா.

parineeti chopra: கடந்த 2011ம் ஆண்டு ‘Ladies vs Ricky Bahl’என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் நடிகை பரினீதி சோப்ரா அறிமுகமாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். Ishaqzaade’,’Golmaal Again’, ‘Shuddh Desi Romance’ என பல ஹிட் படங்களைக் கொடுத்தவர். அதேசமயம், பல தோல்விப் படங்களையும் கொடுத்துள்ளார். வெற்றிகளையும், பல சருக்கல்களையும் கண்டவர்.

சமீபத்திய  நேர்காணல் ஒன்றில் மனம் திறந்த பரினீதி சோப்ரா, “திரைத்துறையில் ஃபேவரைட்டிசம் நிறைய இருப்பதாகவும், திரைத்துறையில் வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்றால் திறமையாளர்களாக இருந்தால் மட்டும் போதாது எனவும், கொஞ்சம் ஃபேவரைட்டிசம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வாய்ப்புக்காக நட்பு வைத்துக்கொள்வது, நெருங்கிப் பழகுவது என சில விஷயங்களைச் செய்ய வேண்டி உள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும், தான் அப்படி செய்வதில்லை, அதனால் தனக்குப் பெரிதாகப் பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றார். நான் எந்த இயக்குநரிடமோ, தயாரிப்பாளர்களிடமோ வலிய சென்று வாய்ப்புக் கேட்பதில்லை. அதற்காக நான் யாரிடமும் பழகுவதில்லை. தன்னிடம் திறமை இருக்கிறது. என் திறமையைப் பார்த்து வாய்ப்புகள் வந்தால் போதும்” என்று மனம் திறந்துள்ளார்.

shyamala

Next Post

வியர்க்குருவை விரட்டும் ஆயுர்வேதம்...வியக்குருவில் இருந்து குழந்தைகள் விடுபட வழிமுறைகள்.....

Wed Apr 24 , 2024
கோடை காலம் என்றாலே அனைவருக்கும் வியக்குரு பிரச்சனை வந்துவிடுகிறது. முக்கியமாக குழந்தைகள் இந்த பிரச்சனைகளால் மிகவும் அவதிப்படுகின்றனர். தோல் பிரச்சனைகளில் முக்கியமான வியர்க்குரு, முகம், கழுத்து, முதுகு, மார்பு மற்றும் தொடைகள் போன்ற இடங்களில் ஏற்பட்டு அதிக அரிப்பையும் எரிச்சலையும் உண்டாக்குகிறது. வியர்வை சுரப்பிகள் தடுக்கப்படும்போது, இந்த தடிப்புகள் ஏற்படுகிறது. அதிகப்படியான வியர்வை, பாக்டீரியா மற்றும் பிற ஆபத்து காரணிகளால் மயிர்க்கால்கள் வழியாக வியர்வை வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது. இந்த வியக்குருவை […]

You May Like