மக்களவைத் தேர்தலில் மூன்றாம் அணி அமைக்கும் பாஜக கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்ய அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் பணிகளை கட்சிகள் வேகப்படுத்தியுள்ளன. இன்று சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் முடிவடைந்த உடன் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் டெல்லி செல்கின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மூத்த நிர்வாகி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் […]

பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்தும், அந்த தொகுதியில் போட்டியிட உள்ள உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதுதான் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. அந்த பட்டியலை இப்போது பார்ப்போம். 2024 லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட அதிகப்படியான விறுவிறுப்புடன் இருக்கிறது. கடைசி நேரத்தில் கூட்டணி, தொகுதிகள் மாற்றம் என களை கட்ட தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் சேரும் என எதிர்பார்க்கப்பட்ட […]

நாடு முழுவதும் 2024 மக்களவைத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கேற்ப பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு இறுதித் தேர்வுகளும், செமஸ்டர்களும் திட்டமிடப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை முதல்கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 39 […]

கோடைகாலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் தடுக்க, மின்மாற்றிகள், கேபிள்களை சீரமைக்க சிறப்பு பராமரிப்பு பணியை மேற்கொள்ள மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் எப்போதுமே மின்தேவை என்பது அதிகமாகவே இருக்கும். உச்சபச்சமாக, கடந்த வருடம் ஏப்ரல் 20ஆம் தேதி, தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 19,347 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. அந்தவகையில், இந்தாண்டு ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்டது. தற்போது கோடை வெயில் துவங்கிவிட்டதால், வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களில் மின் […]

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் தரப்பில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளிலும், மது விற்பனையிலும் முறைகேட்டை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, டாஸ்மாக் கடைகளுக்கு மாவட்ட மேலாளர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில், ”மதுக்கடைகளில் 50 சதவீதத்திற்கு மேல் மது வகைகள் இருப்பு இருக்கக் கூடாது. மதுக்கடையின் சராசரி விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 30 சதவீதத்திற்கு […]

திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் சவுக்கு சங்கரை தயாரிப்பாளர் கே.ராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். விழா மேடையில் அவர் கே.ராஜன் பேசுகையில், “உண்மையிலேயே நான் இதுவரை ஆண்ட்ரியாவை தமிழ் பெண் என்று நினைக்கவே இல்லை. உங்களது பிறந்த இடம் எது என்று கேட்டபோது, அவர் சென்னை தான் என்றார். அப்பா எங்கே வேலை பார்த்தார் என்று கேட்கும்போது ஐகோர்ட் என்றார். சொன்ன உடனே ஒரு அடி தள்ளி உட்கார்ந்தேன். தமிழ் […]

மக்களவை தேர்தல், தமிழக்தில் 21 தொகுதிகளில் திமுக தனித்து போட்டியிடுகிறது, இதன் வேட்பாளர் பட்டியால் நாளை வெளியாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடக்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற […]

நெற்குன்றத்தில் தேர்தல் நடத்தை விதி மீறி அதிமுக கொடியேற்றி 200 பேருக்கு பிரியாணி வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நெற்குன்றம் மீனாட்சி அம்மன் நகரில் நேற்று முன்தினம் தேர்தல் விதிமுறை மீறி அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கொடி ஏற்றி 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி வழங்குவதாக கோயம்பேடு காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நிகழ்ச்சியை உடனடியாக […]

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவைத் தேர்தலில் பாஜக – பாமக இணைநது செயல்படும் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ் கையெழுத்திட்டார். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ், அண்ணாமலை கையெழுத்திட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 […]

ஆப்கானிஸ்தானின் காபூலில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவ 5.3 ஆக பதிவாகியுள்ளது. இது தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம், நிலநடுக்கத்தின் நீளம்: 65.58, ஆழம்: 130 கிமீ என குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வுகளின்படி, இந்த நிலநடுக்கம் ஆப்கானித்தான் மற்றும் […]