டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. …

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் (NIN) ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதில், பாமாயிலை மிதமாக உட்கொண்டால் இரத்தக் கொழுப்பைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய உணவு வழிகாட்டுதல்கள், இந்தியர்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்தைப் பற்றி தகவலறிந்து தேர்வுகளைச் செய்ய அதிகாரம் …

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (மே 26) வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘ரீமல்’ புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து நள்ளிரவு (26.05.2024) 10.30 மணி – (27.05.2024) 12.30 மணி அளவில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை அருகில் …

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 5 மாதத்திற்கு பிறகு தக்காளி விலை கிலோ 60 ரூபாயை எட்டியுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த சந்தைக்கு தினசரி வழக்கமாக 700 முதல் 800 லாரிகளில் …

மே 20ஆம் தேதி நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்குவதற்கு அவரது உறவினர்கள் இன்று சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் …

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளம் வழங்கப்படுகிறது. இந்திய நகரங்கள், எக்ஸ் (X), ஒய் (Y), இசட் (Z) என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 27, 18, 9 சதவீதம், அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிட்டு வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டது. இரண்டு 2 …

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடாமல் இரவு மற்றும் அதிகாலை என இரண்டு மின்னஞ்சல் மூலமாக வந்த மிரட்டலில், 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, எச்சரிக்கையான …

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்துக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து விமான நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்த நிலையில், வெடி குண்டு புரளியை …