fbpx

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் …

அதிமுகவில் இணைய நான் யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ராஜன் செல்லப்பா, எனக்காக சிபாரிசு செய்வதாக கூறியிருக்கிறார். எனக்காக யாரும் பேசத் தேவையில்லை. யாரிடமும் எங்களை அழைத்துக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று சொன்னதில்லை. அதிமுகவில் இணைவதற்காக நான் யார் வீட்டு …

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு. அதிமுக பிரமுகர் நல்லதம்பி என்பவர் மூலம் 33 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக புகார். 2021ல் பதியப்பட்ட வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் …

எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையை ஏற்காத தமிழ்நாடு அரசுக்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், கல்வியில் மட்டுமல்ல ஏற்கனவே அறிவித்த …

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுகவின் மாநாட்டை முடித்துவிட்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு சேலம் வந்தார். இந்நிலையில் அங்கு நேற்று காலை 11 மணி அளவில் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி 30 …

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் எஸ்எஸ்ஏ நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க முடியாது’ என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் …

தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக அதிமுக சார்பில் கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்குச்சாவடி குழு அமைப்பது, கட்சி வளர்ச்சி பணிகளைதுரிதப்படுத்துவது முதலான பணிகளை விரைவாக முடிப்பதற்காக கட்சி ரீதியிலான 82 மாவட்டங்களுக்கும் …

போடி அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் 3ம் ஆண்டு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படித்து வந்தார். செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் விக்னேஷ் கல்லூரி விடுதியில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றவர் நெடுநேரம் கடந்தும் மீண்டும் அவர் அறைக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவர்கள், விடுதி காவலருடன் …

“தமிழ்நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய நிதியைத் தராவிட்டால் வரி செலுத்த முடியாது” என தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க முடியும் என்ற மத்திய அமைச்சரின் …

மதுரையில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தொலைநோக்கு பார்வையுடன் 2047-க்கான அடித்தளமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்வது உள்ளிட்ட அனைத்து …