ஒரு சவரன் தங்கம் விலை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது. தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.54 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. என்னதான் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டாலும் மக்களுக்கு தங்கம் மீதான ஆர்வம் மட்டும் குறையவே […]

இந்தியன் ஆயில், பாரத் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. இந்த சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்கியதும், அவர்களது வங்கிக் கணக்குக்கு மத்திய அரசின் மானியத் தொகை செலுத்தப்படுகிறது. மேலும், ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின் கீழ்,வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 41 லட்சம் இலவச பயனாளிகள் […]

முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி இன்னும் 11 நாட்களில் அதன் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்கொடுக்கத் தயாராக உள்ளது. சிகரெட் தயாரிப்பாளரான ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் சமீபத்தில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் இந்தியாவின் மிகப்பெரிய FMCG நிறுவனம் அதன் Q4 முடிவுகளுடன் இறுதி ஈவுத்தொகை குறித்தும் அறிவிப்பை வெளியிட உள்ளது. ஐடிசி நிறுவனம் நான்காவது காலாண்டில், சிகரெட் மற்றும் எஃப்எம்சிஜி ஈபிஐடியில் ஆண்டுக்கு ஆண்டு ஒற்றை இலக்க வளர்ச்சியுடன் வருவாய் சீராக […]

டெஸ்லாவின் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் பேக்கேஜை சீனாவில் ரோபோ டாக்ஸிகளில் நிறுவி சோதனை செய்ய எலான் மஸ்க் கூறியுள்ளார். இதுகுறித்து டெஸ்லா CEO எலான் மஸ்க் கூறுகையில், தனது நாட்டில் ரோபோ டாக்ஸிகளை பரிசோதிக்குமாறு டெஸ்லாவை சீனா வரவேற்றுள்ளது. இது ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும் என்றார். சீன அரசு அதிகாரிகள் ரோபோ டாக்ஸியின் ஃபுல் செல்ஃப் டிரைவிங்- எப்எஸ்டி இயக்கத்துக்கு உடனடியாக அனுமதி அளிக்கவில்லை. எப்எஸ்டி இயக்கத்தை முழுமையாக […]

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜியோ நிறுவனம் புதிதாக ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி வாடிக்கையாளர் 15 ஓடிடி தளங்களின் பிரீமியம் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்குக் கிடைக்கும் விதமாக ரூ.888 மாதாந்திரத் திட்டத்திற்கு விரிவான ஸ்ட்ரீமிங் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 30 Mbps வேகத்தில் வரம்பற்ற […]

RBL வங்கி அதன் நிலையான வைப்புத்தொகை (FD) வட்டி விகிதங்களை ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு உயர்த்தி உள்ளது, இது மே 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த திருத்தப்பட்ட விகிதங்கள் மூத்த குடிமக்கள் உட்பட பல முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும். RBL வங்கி 18 முதல் 24 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு அதிகபட்சமாக 8% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே காலத்திற்கு, மூத்த […]

அட்சய திருதியை நாள் அன்று (மே 10) தங்கம் விலை அதிகரித்த நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விரிவாக பேசியுள்ளார். தங்கம் விலை அட்சய திருதியை நாளில் மட்டும் மூன்று முறை தங்கம் விலை அதிகரித்தது. மே 10ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை 155 ரூபாய் விலை உயர்ந்து 6,770 ரூபாய்க்கு விற்பனையானது. மே 11ஆம் தேதி ரூ.20 […]

வருமான வரி செலுத்துவோர் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீர்க்கும் சேவையை வருமான வரித்துறை ஆணையம் புதிதாக கொண்டு வந்துள்ளது. இந்தியாவில், வருமான வரி விதிகளின்படி, வரிக்கு உட்பட்டவர்கள் வருடந்தோறும் வருமான வரி மற்றும் அதன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். அதாவது, மாதந்தோறும் வருமானம் மற்றும் சம்பளம் பெறுபவர்கள், தங்களது பான் நம்பரை பயன்படுத்தி, வருமான வரித்துறையின் வெப்சைட்டில் இந்த கணக்கினை […]

சப் ரிஜிஸ்டர் அலுவலகங்களில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரிய ஆவணதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; ஆவணப்பதிவு தொடர்பாக பதிவு அலுவலகத்திற்கு வரும் ஆவணதாரர்களால் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் காணப்படும் சிறு பிழைகள் தொடர்பாக உரிய காரணங்களின்றி அலைக்கழிக்கப்படுவதாகவும், அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சார்பதிவாளர்களால் […]

பொதுவாக அட்சய திரிதியை நாளில் மக்கள் ஆர்வத்துடன் தங்க நகை வாங்குவது வழக்கம். அதன்படி, தங்க நகைக் கடைகளில் மக்கள் ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மூன்று முறை தங்கம் விலை உயர்ந்து ஒரு சரவன் 54000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செழிப்பு நன்மை கிடைக்கும், அதே நேரத்தில் பொருட்கள் நிறைய வந்துசேரும் என்பது ஐதீகம். […]