CAA: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள்,சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது. சிஏஏ சட்டம் […]

எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கு 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்முடைய நாட்டை பொறுத்தவரை மக்கள் தொகை உயர உயர, எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்தபடியே இருக்கிறது. அதிலும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பயன்பாடு என்பது நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கிறது. பஜாஜ் ஆட்டோ, ஓலா, போன்ற நிறுவனங்கள் சமீபகாலமாகவே, எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி + விற்பனையை பெருக்கி வருகிறது. அதனால்தான் நம்முடைய நாட்டில், 2024ஆம் நிதியாண்டில் 8.50 லட்சம் […]

2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து கார்களிலும் பின் இருக்கைக்கான சீட் பெல்ட் அலாரம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய போக்குவரத்துத்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும். இந்த விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை. பொதுவாக கார்களில் பயணம் செய்யும் போது ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் சீட் பெல்ட் […]

ஆபாசப் பதிவுகள் இடம்பெற்ற ஓடிடி தளங்களுக்கு எதிராக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை. ஆபாசப் பதிவுகள் இடம்பெற்ற 18 ஓடிடி தளங்களை முடக்கி தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 19 இணையதளங்கள், 10 செயலிகள் (கூகுள் பிளே ஸ்டோரில் 7, ஆப்பிள் செயலி ஸ்டோரில் 3) மற்றும் இந்தத் தளங்களுடன் தொடர்புடைய 57 சமூக ஊடக கணக்குகளும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. ஆக்கப்பூர்வமான கருத்து என்ற அடிப்படையில் […]

தென் கொரியாவில், ஹூண்டாய் மோட்டார் மற்றும் அதன் சகோதர நிறுவனமான கியா கார்ப் ஆகியவை சார்ஜிங் சிஸ்டங்களில் மென்பொருளில் உள்ள சிக்கல்கள் காரணமாக சுமார் 1,70,000 மின்சார வாகனங்களை (EV) திரும்பப் பெறுகின்றன. இந்த திரும்பப்பெறுதல் நடவடிக்கைகள் மார்ச் 18 ஆம் தேதி தொடங்கும். இது குறித்து பல புகார்கள் எழுந்த நிலையில், தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் இதனை எதிரொலித்தது. அதன்பிறகு ஆட்டோமொபைல் நிறுவனங்களால் இந்த திரும்பப்பெறுதல் நடவடிக்கை […]

ஆதார் இலவசமாக புதுப்பிக்க இன்று முதல் ஜூன் 14 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை மார்ச் 14, 2024 வரை இலவசமாகப் புதுப்பிக்கலாம் என்று UIDAI ஆரம்பத்தில் அறிவித்தது. இதற்கான இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் காலக்கெடுவை ஜூன் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு இரண்டாவது முறையாகும். மக்கள் தங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிப்பது மிகவும் முக்கியம், குறிப்பாக கடந்த […]

நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கொரியன் நிறுவனமான ‘சாம்சங்’ செல்போன் தயாரிப்பு நிறுவனம், தற்போது புதிதாக சாம்சங் ‘கேலக்ஸி ரிங்’ (Samsung Galaxy Ring) என்ற மிக இலகுவான கை விரல்களில் அணிய வசதியாக மோதிர வடிவில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மோதிரத்தில் மேம்பட்ட ஆரோக்கியம், செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் வசதிகள் அமைந்துள்ளன. இந்த […]

சிறந்த பனையேறும் இயந்திரத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை ஏறும் விவசாயிகளுக்கு கருவிகள் வழங்குதல் போன்ற இனங்களுக்கு ரூ.1.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், […]

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல்கள் அதிரடி தள்ளுபடியில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. அதை எப்படி பெற வேண்டும் என்பது குறித்து நாம் இந்தப் பதிவில் பார்க்கலாம். நீங்கள் உங்கள் முதல் ஐபோனை வாங்கத் திட்டமிட்டால் உடனடியாக இப்போது அமேசானில் இருக்கும் டீல்களை பார்க்க வேண்டும். அதில், ஐபோன்களுக்கு மிகப் பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளனர். ஐபோன் 14 வெளியாகி இப்போது ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், இப்போது அந்த மொபைலுக்கு அமேசானில் […]

முட்டையில் இருந்து பிறக்கும் மனிதக் குழந்தைகள் எப்படி வெளியே வரும் என்பது குறித்து AI உருவாக்கிய படங்கள் வைரலாகி வருகிறது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தற்போது உலகில் பல மாற்றங்களை புரிந்து வருகிறது. மனிதனின் வேலைகளை குறைப்பதோடு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம் என்ற பலவற்றிலும் முன்னேற்றங்களை கொண்டு வருகிறது. சைபர் குற்றங்களும் AI மூலமாக பெருகி வருவதை நாம் காண்கிறோம். AI பலரது வாழ்வில் ஒரு முக்கிய […]