fbpx

கள்ளக்காதலியுடன் உல்லாசத்தின் போது எடுத்த வீடியோ..! மனைவிக்கு அனுப்பிவைத்து ரசித்த கணவன்…!

சேலத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை மனைவிக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தொட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், இரு மகன்களுக்கும் உள்ளனர். சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. இதில், ஜெய்சங்கருக்கு சின்ன பொண்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஜெய்சங்கரின் மனைவி சாந்திக்கு கள்ளக்காதல் விவரம் தெரியவர, தனது மகன்களை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், ஜெய்சங்கர் தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை மனைவி சாந்தியின் செல்போன் எண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாந்தி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஜெய்சங்கர் மற்றும் சின்ன பொண்ணு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Candy Crush விளையாட்டில் ரூ.30 லட்சம் செலவழித்த பாதிரியார்…! அதுவும் தேவாலய நிதியாம்…!

shyamala

Next Post

"சிறைக்குச் செல்ல நான் தயார்.. ஆனால்!!" - இயக்குநர் அமீர் ஆவேசம்!

Sun May 5 , 2024
சிறைக்குப்போக நான் தயார் ஆனால், நான் வெறுக்கிற போதைப்பொருள் குற்றத்துக்காக நான் சிறை செல்ல மாட்டேன் என்றும், வழக்கு குறித்து தீவிரமாக விசாரிக்காமல் தீர்ப்பெழுதாதீர்கள் என்றும் இயக்குநர் அமீர் ஆவேசமாக பேசியுள்ளார். ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து, மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக […]

You May Like