உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் என்னும் நகரில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வில் நடிகர், நடிகைகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழா முதன்முதலில் 1946ல் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களை அங்கீகரிப்பதற்காக நடத்தப்பட்டது.
2024ம் ஆண்டுக்கான 77வது கேன்ஸ் திரைப்பட விழா வருகிற 14ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழா திரைப்படத்தை தாண்டி, ஆடம்பரமான பேஷன் மற்றும் நேர்த்தியான ஆடைகளை உலகிற்கு காட்டும் இடமாக மாறியுள்ளது. இதில், வழங்கப்படும் பனை ஓலை விருது தான் ஹைலைட்.
இந்த நிலையில், இந்த விழாவில் பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் ஹைதாரி ஆகியோர் வரவிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறப்பிக்க உள்ளனர். அவர்கள் L’Oreal இன் தூதர்களாக சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான ஆடையில் வந்து அசத்துவார். கடந்த ஆண்டு, வித்தியாசமான உடையில் அவர் பங்கேற்றார். கறுப்பு மற்றும் சில்வரால் ஆன கவுனை அணிந்து அனைவரின் கவனத்தையும் அவர் ஈர்த்தார்.
கடந்த 2022ல் ஆண்டு இந்த விழாவில் அதிதி அறிமுகமாகி, சிவப்பு கம்பளத்தில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பெண்கள் அதிகாரமளிப்பதற்கான காரணத்திற்காக தொடர்ந்து வெற்றிபெறும் ஒரு பிராண்டுடன் இணைந்திருப்பது ஒரு மரியாதை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விழாவில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், வித்தியாசமான உடையில் சிவப்பு கம்பளத்தில் இடம்பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
100க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்ற ‘ஜலேபி பாபா’ சிறையில் மரணம்!