fbpx

நடிகர் அஜித்தின் “குட் பேட் அக்லி” படத்தின் புதிய அப்டேட்..!

நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் துணிவு படத்திற்கு பிறகு, மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா காஸண்ட்ரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து முன்னதாக படக்குழு சென்னை திரும்பியது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘AK 63’ திரைப்படத்துக்கு “குட் பேட் அக்லி” (Good Bad Ugly) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படம் 2025-ம் ஆண்டு பொங்களுக்கு வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “குட் பேட் அக்லி” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பெற்றோர்களே உஷார்..!! 10ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! வைரலாகும் வீடியோ..!!

shyamala

Next Post

வினாடிக்கு 200 முறை குத்தும் ஊசி..!! டாட்டூ போட போறீங்களா..? இந்த வீடியோ உங்களுக்கு தான்..!!

Sat May 11 , 2024
பழமையான கலைகளில் ஒன்று பச்சைக் குத்துதல் எனப்படும் டாட்டூக்கள். இந்த டாட்டூக்கள் 5,000 ஆண்டுகள் பழமையானது. சிறிய அளவில் தொடங்கி தற்போது உடல் முழுவதும் டாட்டூக்களை குத்தும் பழக்கம் தொடங்கியுள்ளது. நரிக்குறவர்கள் மட்டுமே பச்சை குத்தும் தொழில் செய்து வந்த நிலையில், தற்போது நிறைய நவீன கருவிகள் மூலம் டாட்டூ குத்தப்பட்டு வருகிறது. இந்த டாட்டுக்களுக்கு பயன்படுத்தும் நிறமிகள் நம் தோலில் ஊடுருவி செல்வதால் இதை கைதேர்ந்த கலைஞர்களிடம் மட்டுமே […]

You May Like