fbpx

கணவர் இல்லாத நேரம்… அண்ணியிடம் மைத்துனர்..! வீடியோவை காண்பித்து…! அரங்கேறிய கொடூரம்..

முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், கடவ்லி கொத்வாலி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2ம் தேதி தன் கணவர் வெளியே சென்றபோது, யாரும் இல்லாத நேரத்தில், கணவரின் சகோதரர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ மூலம் மிரட்டியதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, வெளியே சென்ற கணவர், வீடு திரும்பியதும் அவரிடம், அழுது கொண்டே நடந்ததை அந்த பெண் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பெண்ணிடம், இனிமேல் நீ என் மனைவி அல்ல என்றும், என் தம்பிக்கு தான் மனைவி எனவும் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்ட அந்த பெண் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளாள்.

அதனை தொடர்ந்து, பொழுது விடிந்தால் சரியாகி விடும் என நினைத்த அந்த பெண்ணிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.  அடுத்த நாள் கணவனும், அவரது தம்பியும் அந்த பெண்ணின் அறைக்கு வந்துள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த கணவன், மனைவியின் மார்பில் அமர்ந்து கொண்டு, துப்பட்டாவை எடுத்து, பெண்ணை கொல்ல முயற்சித்துள்ளான். இதனை கணவரின் தம்பி தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அவர்களிடமிருந்து தப்பியோடிய அந்த பெண், இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். மேலும், போலீசிலும் புகார் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவான குற்றவாளிகள் இருவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

GOAT படத்தின் புதிய அப்டேட்: அடுத்த பாடல்…! வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்..!

shyamala

Next Post

திருமணத்திற்கு முன்பு லிவிங்கில் இருக்க ஆசை! விருப்பம் தெரிவித்த பாரதி கண்ணம்மா ரோஷினி!

Mon Apr 29 , 2024
bharathi kannamma roshini: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக இருந்தது பாரதி கண்ணம்மா சீரியல். இதில், நடித்ததன் மூலம் நடிகை ரோஷினி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். ஹீரோயின் என்றாலே வெள்ளை நிறம் என்ற  எண்ணத்தை மாற்றி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பாரதி கண்ணம்மா சீரியல் தான் இவருக்கு முதல் சீரியல் என்றாலும், தன்னுடைய அசாத்தியமான நடிப்பால், ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுவிட்டார். இதையடுத்து […]

You May Like