fbpx

எவரெஸ்ட் சிகரத்தில் ட்ரெக்கிங் செய்த நடிகை ஜோதிகா…. வேறு எந்த நடிகையும் செய்யாத புதிய முயற்சி…!

நடிப்பில் சிகரத்தை அடைந்தவர்கள் என்று சில நட்சத்திரங்களை ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில் நடிகை ஜோதிகா உண்மையாகவே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஜோதிகா அவ்வப்போது சுற்றுலா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது, அங்குள்ள ஒரு சிறிய வீட்டில் தங்கியிருப்பது, மின்சாரம் இல்லாத அந்த இடத்தில் சோலார் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து வாழ்வது, ட்ரக்கிங் செல்வது, பனி மழையில் நனைவது, அங்கு கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவது, உலகின் மிகச் சிறிய ரன்வே கொண்ட விமான நிலையத்தை அடைவது, உலகின் மிக உயரத்தில் இருக்கும் ஹோட்டலில் சாப்பிடுவது உள்ளிட்ட காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

இதுவரை வேறு எந்த நடிகையும் செய்யாத புதிய முயற்சி செய்த ஜோதிகாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உண்மையாகவே நீங்கள் சிகரத்தை அடைந்து விட்டீர்கள் என்று வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா நடித்த ’சைத்தான்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ’ஸ்ரீகாந்த்’ உட்பட இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கணவர் இல்லாத நேரம்… அண்ணியிடம் மைத்துனர்..! வீடியோவை காண்பித்து…! அரங்கேறிய கொடூரம்..

shyamala

Next Post

தீவிரமடையும் பறவை காய்ச்சல்..!! மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை..!! மக்களே உஷார்..!!

Tue Apr 30 , 2024
நமது நாட்டில் பறவை காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தங்கள் நோய் கண்காணிப்பை அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. நமது நாட்டில் இப்போது ஆங்காங்கே பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பறவை காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இனை நோய்கள் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இந்த பறவை காய்ச்சலால் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளலாம் […]

You May Like