fbpx

ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட நடிகை…. தீபிகா படுகோனே செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி….

விமான நிலையத்தில் ரசிகரின் செல்போனை நடிகை தீபிகா படுகோனே தட்டிவிட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டின் டாப் ஜோடியாக திகழ்ந்து வருகின்றனர் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். தீபிகா நடிப்பில் வெளியான பதான், ஃபைடர் போன்ற படங்கள் பாலிவுட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. கடந்த பிப்ரவரி மாதம் தான் இந்த ஜோடிகள் தாங்கள் பெற்றோர் ஆக போவதை உறுதிசெய்தனர்.

இதற்கிடையில் தனது திருமண புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கி விவாகரத்து சர்ச்சையை கிளப்பினார் ரன்வீர். இதனால், இருவரும் விவாகரத்து பெறவுள்ளனரா என சர்ச்சை வெடித்தது. அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தீபிகாவுடன் விவாகரத்து இல்லை என்பதையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரன்வீர் தெளிவுப்படுத்தி இருந்தார்.

இந்த சர்ச்சை தற்போது ஓய்ந்த நிலையில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பிள்ளது. கர்ப்ப காலத்தில் மனைவி தீபிகாவை ரிலாக்ஸ் செய்ய அவரை பேபி மூன் அழைத்து சென்றிருக்கிறார் ரன்வீர். அவர்களது பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் மும்பை திரும்பினர்.

அப்போது மும்பை விமான நிலையத்தில், இவர்களை சூழ்ந்த ரசிகர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதனைப் பார்த்த தீபிகா, தன்னைப் வீடியோ எடுத்த ரசிகர் ஒருவரின் செல்போனை கையால் மறைத்து தட்டிவிட முயன்றிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

“அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்” – மத்திய அரசுக்கு மருத்துவர்கள் குழு கோரிக்கை!

shyamala

Next Post

வீங்கிய முகம்...! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை....!  ஷாக் ஆன ரசிகர்கள்

Sat May 11 , 2024
kajal agarwal : தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர், திருமணத்துக்கு பின்னர் மார்க்கெட் இழந்துவிட்டார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது. காஜல் அகர்வால் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் உருவாகி […]

You May Like