Bade Miyan Chote Miyan’ படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்த மனுஷி சில்லார் தனக்கும், அக்ஷய் குமாருக்கும் 30 வயது வித்தியாசம் என தெரிவித்துள்ளார்.
manushi chhillar: 2017ம் ஆண்டு மிஸ் வோர்ல்ட் பட்டத்தை வென்ற இந்தியப் பெண்ணான மனுஷி சில்லார், திரைத்துறையில் நடிகையாக வலம் வர விரும்பினார், அதை தொடர்ந்து, தன் முதல் படத்திலேயா பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமாருடன் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ என்ற பீரியாடிக் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் அக்ஷய் குமாருடன் ‘Bade Miyan Chote Miyan’ நடித்திருக்கிறார்.
கடந்த வாரம் 11ம் தேதி வெளியான இத்திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இப்படம் குறித்த ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் சிலர், 26 வயதாகும் மனுஷி சில்லார், 56 வயதாகும் நடிகர் அக்ஷய் குமாருக்கு மனைவியாக நடித்திருப்பதைக் கேலி செய்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், நடிகை மனுஷி சில்லார், “தனக்கும் அக்ஷய் குமார் சாருக்கும் 30 வயது வித்தியாசம் இருப்பதாகவும், இந்த படத்தில் அவரின் மனைவியாக நடித்தது குறித்தும் பலரும் சமூக வலைதளங்களில் கேலி செய்வதைப் பார்த்தேன். அக்ஷய் குமார் சார் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் என்றும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைப்பதை யார் வேண்டாம் என நிராகரிப்பார்கள் என்றார். அதுமட்டுமின்றி படக்குழுவினர் நன்றாக யோசித்து கதைக்கேற்றவாறுதான் நடிகர்களைத் தேர்வு செய்கிறார்கள் எனவும், தனக்காக நான்தான் பேசியாக வேண்டும் என்று காட்டமாக பதலளித்துள்ளார்.