fbpx

இறக்கும் தருணத்தில் தந்தைக்கு செய்த சத்தியம்! உருக்கமாக பேசிய டிடி…!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி, தனது தந்தை குறித்து உருக்கமாக பேசிய விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் டிடி. இவரது முழு பெயர்,  திவ்ய தர்ஷினி. ஆனால், தான் தொகுத்து வழங்கும் ஷோக்களில் அவரை டிடி என்று அறிமுகப்படுத்தியதால் அதுவே அவரது செல்ல பெயராக மாறியது.

நேர்காணல் காணும் செலிப்ரிட்டிகளை சங்கடப்படுத்தாத தொகுப்பாளாராக திகழ்ந்தவர் டிடி. அதனாலேயே, பல திரை  பிரபலங்கள் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். கடந்த 2014ம் ஆண்டில் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 3 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு கடந்த 2017ம் ஆண்டு, விவாகரத்து கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார். இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருந்தது.

இதையடுத்து, சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு ஆட்டோ இம்யூன் நோய் தாக்கியது. இதனால் உடைந்து போனார். இந்த நிலையில், தந்தை குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய டிடி, தனது தந்தைக்கு அவரது மரண படுக்கையில் அவருக்கு செய்து கொடுத்த சத்தியம் குறித்து பேசினார்.

தனது தந்தை இறக்கும் தருவாயில் இருந்த போது, இனி இந்த குடும்பத்தை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு அவர் “நீங்கள் கவலை படாதீங்கப்பா நான் பார்த்துக்கொள்கிறேன்..” என்று பேசியதாகவும் கூறியிருக்கிறார். இவர் தனது தந்தை குறித்து பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், நாங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அனைத்து விஷயங்களையும் எங்களையே அப்பா செய்ய சொல்வார் எனவும், தனது தந்தைக்கு ஒரு நல்ல ஷர்ட் வாங்கி கொடுக்காததை எண்ணி தான் இப்போதும் வருத்தப்படுவதாகவும் அவரை எல்லா நாளும் மிஸ் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களே..!! ATM கார்டை மட்டும் தவற விட்றாதீங்க..!! இப்படியும் பணம் பறிபோகுமா..?

shyamala

Next Post

விருதுநகர் கல்குவாரியில் வெடிவிபத்து..!! 4 பேர் உயிரிழப்பு..!! பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அச்சம்..!!

Wed May 1 , 2024
விருதுநகர் அருகே காரியப்பட்டியில் கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. ஆவியூர் அருகே கீழ உப்பிலிகுண்டு கிராமத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வெடிவிபத்தில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அச்சமும் எழுந்துள்ளது. உழைப்பாளர்கள் தினத்தில் விபத்து […]

You May Like