fbpx

இதற்காக தான் திருமணம் செய்துகொள்ளவில்லை….. திருமணம் குறித்து மனம் திறந்த கோவை சரளா……

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகை கோவை சரளா. கடந்த 1983ம் ஆண்டு ‘முந்தானை முடிச்சு’ படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். ‘வைதேகி காத்திருந்தால்’ ‘தம்பிக்கு எந்த ஊரு’  ‘மண்ணுக்கேத்த பொண்ணு,  “கரகாட்டகாரன் “, தர்மம் வெல்லும், ராஜா ராஜாதான், கைவீசம்மா கைவீசு உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தன்னை குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார். அதில், தனது திருமணம் குறித்தும் கோவை சரளா மனம் திறந்துள்ளார். தான் அரசியலுக்கு வர இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், திருமணமும் செய்து கொள்ள மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். 

நாம் பிறக்கும்போது தனியாக பிறக்கிறோம். இறக்கும்போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் தேவையில்லை என்பதே என்னுடைய எண்ணம். இருக்கும் வரை சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினார். மேலும், எனக்கு யாரையும் சார்ந்து வாழ விருப்பம் இல்லை என்றார்.

இதுவரை 900 படங்களில் நடித்துவிட்டேன்.  இதில் 15 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளேன். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகை. அவர் படங்களை பார்த்துத்தான் நடிகையாக வேண்டும் என்ற ஆசையே வந்தது என்றார்.  சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உறவினர்கள் வீட்டை விட்டு விரட்டியதால் மருத்துவமனையில்  இருப்பதாகவும் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் வதந்திகள் பரவின.  இந்த விஷயத்தில் துளி கூட உண்மை கிடையாது. சகோதரிகள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள். எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. வீட்டில் போர் அடித்தால் கோவில்களுக்கு சென்று வருவேன்” என ஓபன் டாக் கொடுத்துள்ளார்.

தக் லைப் படத்தின் அப்டேட்: ஓவர்சீஸ் விநியோகம் எத்தனை கோடி தெரியுமா?

shyamala

Next Post

தூள்...! புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை...!

Wed May 15 , 2024
சேலம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற விருப்பமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2024-ம் ஆண்டில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சேரவும் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். வெல்டர், பெயிண்டர் (பொது), வயர்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8ம் வகுப்பிலும். எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெசினிஸ்ட், மெசினிஸ்ட் கிரைண்டர், […]

You May Like