இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஜோடி விரைவில் விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரெஹானாவின் மகன் தான் ஜிவி பிரகாஷ். இவர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, முதல் படத்திலேயே அவரது இசைக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதனை தொடர்ந்து, பல ஹிட் படங்களுக்கு இசையமைத்த ஜி.வி. கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
பென்சில், நாச்சியார், எனக்கு இன்னோரு பெயர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ்லி, செம, குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். தற்போது, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான், அமரன், நிலவிற்கு என் மேல் என்னடி கோவம், வீரதீர சூரன், வாடிவாசல் என பல முக்கியத் திரைப்படங்களிலும் ஜி.வி. இசையமைத்து வருகிறார்.
இதற்கிடையே, கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்துகொண்டார் . இவர்களுக்கு, கடந்த 2020-ம் ஆண்டு அன்வி என்கிற பெண் குழந்தை பிறந்தது. ஜிவி பிரகாஷும், அவரது மனைவி சைந்தவியும் சேர்ந்து ஏராளமான ரொமாண்டிக் ஹிட் பாடல்களை பாடி இருக்கின்றனர்.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனால், சினிமா பிரபலங்களை மட்டுமல்லாது அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
எலக்ட்ரிக் ஆட்டோ-வை அறிமுகம் செய்யும் பஜாஜ்..! அப்டேட் கொடுத்த நிறுவனம்!