fbpx

காதலை நிராகரித்த பெண் கொடூர கொலை… காதலன் வெறிச்செயல்….

கர்நாடகாவில் காதலை நிராகரித்ததால் காதலன் அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

காதல் என்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்துதல், விட்டுக் கொடுத்தல் உள்ளிட்டவை அடங்கும். ஆனால், தற்போது காதல் என்று கூறிக் கொண்டு சந்தேகம் உள்ளிடவற்றை அளித்துக் கொள்வதை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளி பகுதியில் 20 வயதான அஞ்சலி அம்பிகேரா என்ற பெண் உள்ளார். அவரை விஷ்வா என்ற கிரிஷ் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

தனது காதலை ஆசை ஆசையாய் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த பெண் கிரிஷின் காதலை நிராகரித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கிரிஷ், சமயம் பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பெண்ணை மறுபடியும் பார்த்து தனது காதலை தெரிவித்துள்ளார் கிரிஷ்.

அப்போதும், அந்த பெண் சில காரணங்களால் அவரின் காதலை நிராகரித்துவிட்டார். தொடர்ந்து அப்பெண் மீது ஆத்திரத்தில் இருந்த கிரிஷ், அந்த பெண் தனியாக இருப்பதை அறிந்து அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். தூங்கிக் கொண்டிருந்த அஞ்சலி அம்பிகேராவை தான் மறைத்து எடுத்து சென்ற கத்தியால் கொடூரமாக குத்தினார். இதில், அப்பெண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஓடி வருவதை கண்ட கிரிஷ், தப்பியோடினார்.

இதனையடுத்து, தகவலறிந்து சென்ற போலீசார்,  அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கிரிஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து அந்த இளைஞரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் : நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, போராட்ட பாடலை முடக்கிய யூடியூப் தளம்!

shyamala

Next Post

மாதவிடாய் வலியால் அவதிப்படுறீங்களா..? இதை ஃபாலோ பண்ணி பாருங்க..!! வலி உடனே பறந்து போயிரும்..!!

Thu May 16 , 2024
உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மாதவிடாய் சமயத்தில் ஏற்படக்கூடிய வலிகளாலும், தசைபிடிப்புகளாலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கருப்பையின் மென் படலங்களை வெளியேற்றும்போது சுருங்குவதன் காரணமாக இந்த தசைபிடிப்புகள் ஏற்படுகின்றன. இவை மிதமான அசௌகர்யம் முதல் கடுமையான வலி வரை கொடுக்கும். இத்தகைய மாதவிடாய் கால தசைபிடிப்புகளை குறைக்க உதவும் 7 வைத்திய முறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். ஹீட் தெரபி (வெப்ப சிகிச்சை) : அடிவயிற்றுப் பகுதியில் வெப்ப சிகிச்சை […]

You May Like