fbpx

கரீனா கபூருக்கு கோர்ட் நோட்டீஸ்…. ரசிகர்கள் அதிர்ச்சி….

நடிகை கரீனா கபூருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஹாலிவுட்டிலும் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சைப் அலி கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகை கரீனா கபூருக்கு, மத்திய பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவர், கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடைய கர்ப்ப பைபிள் என தாய்மார்களுக்கான உயரிய கையேடு’ என்ற பெயரில் புத்தகம் எழுதி வெளியிட்டிருந்தார். கரீனா கபூர் எழுதியிருக்கும் புத்தகத்தின் தலைப்பில் ‘பைபிள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், புத்தகத்தின் தலைப்பு கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி, வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி என்பவர் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், அதனைத் தொடர்ந்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார். இந்த இரு நீதிமன்றங்களும் கிறிஸ்டோபர் ஆண்டனியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டன.

இதனையடுத்து, மத்தியபிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி மேல் முறையீடு செய்தார். இதனை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் இந்த வழக்குத் தொடர்பாக நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் ரூ.14,000 கோடி..!! 20,000 கிலோ தங்க நகைகள் விற்பனை..!! களைகட்டிய அட்சய திருதியை..!!

shyamala

Next Post

தினமும் இதை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டாலே போதும்..!! அந்த விஷயத்தில் உங்களை அடிச்சிக்க முடியாது..!!

Mon May 13 , 2024
பிஸ்தாவை தினந்தோறும் எடுத்துக் கொள்வது பாலுணர்வை தூண்டும் என்றும், ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கைக்கு உதவும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மிகவும் விலை உயர்ந்த பருப்புகளில் ஒன்றான பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி, ஆண்மை அதிகரிக்கும் என சமூகவலைதளங்களில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை காண முடிகிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள உடற்பயிற்சி நிபுணர் தருண்தீப் சிங் ரெக்கி, ”பிஸ்தா […]

You May Like