fbpx

கவர்ச்சி உடை…. எனது வேறொரு பக்கத்தை பார்க்க முடிந்தது – நடிகை அவிகா கோர்

பிரபல நடிகை அவிகா கோர் கவர்ச்சி புடவை அணிந்து நடனமாடியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிகா வது என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அவிகா கோர். அந்த தொடர் மூலம் அவர் ஏகத்திற்கும் பிரபலமானார். வளர்ந்த பிறகு தொலைக்காட்சி தொடர்கள் தவிர்த்து படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில், பிரபல கிரிக்கெட் வீரர் ரசலும் இணைந்து முதல்முறையாக பாலிவுட் பாடல் ஒன்றில் நடனம் ஆடியுள்ளனர்.

ரசலும் நடிகை அவிகா கோரும் இணைந்து ஆடியுள்ள “லட்கி து கமால் கி” என்ற இந்தி பாடல் கடந்த 9-ம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை பலாஷ் முச்சல் இசையமைத்து, இயக்கி இருக்கியிருந்தார். கிரிஷ் மற்றும் வினித் ஜெயின் இப்பாடலை தயாரித்தனர்.

இந்நிலையில், இப்பாடலில் நடனமாடியது குறித்து அவிகா கோர் கருத்து தெரிவித்துள்ளார். பலாஷ் முச்சல் எனது நண்பர், அவர் என்னிடம் ரசலை வைத்து ஒரு பாடலை இயக்க உள்ளதாக கூறினார். ரசல் இந்தியில் பாடுவதை என்னால் நம்பமுடியவில்லை. அந்த பாடலை கேட்டபோது, எப்படியாவது இதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது பலாஷ் முச்சலிடம் நானும் அதில் ஒரு பகுதியாக இருக்க முடியுமா? என்று மீண்டும் மீண்டும் கேட்டேன்.

பெரும்பாலான கதாபாத்திரங்கள் சீரியஸாகவே நடித்த நான், தற்போது ரசலுடன் இந்த பாடலில் நடனமாடியது புதுவிதமாக இருந்தது. இதில், எனக்கு கவர்ச்சி புடவை அணிந்து, எனது வேறொரு பக்கத்தை ஆராய வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் நடனமாடுவது எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Google Map-இல் இருக்கும் இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இவ்வளவு பயனுள்ளதா..?

shyamala

Next Post

தோனி ஜெர்சி நம்பர் 7...... அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் எண் 6.....நடிகை ஜான்வி கபூர் கருத்து

Thu May 16 , 2024
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக உள்ளார். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் இவர், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாகி (Mr & Mrs Mahi) என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் மஹிமா என்ற […]

You May Like