நடிகை மாளவிகாவால் எனக்கும் குஷ்புவுக்கும் சண்டை வந்தது என்று இயக்குனர் சுந்தர் சி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது நேரத்தில் வரலாறு வருகிறது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் சுந்தர்.சி. இவர் 1995-ம் ஆண்டு ‘முறை மாமன்’என்ற படத்தினை இயக்கினார். இவர் இயக்கிய முதல் தமிழ் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து, நகரம், கலகலப்பு, அரண்மனை போன்ற படங்களை இயக்கி நடித்தார்.
தற்போது அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் சுந்தர்.சி தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், நடிகை மாளவிகாவை நான் தான் அறிமுகப்படுத்தினேன். தான் அறிமுகப்படுத்திய நடிகைகளில் பிடித்த நடிகை மாளவிகா தான் என்றும், அவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா என்றார்.
ஸ்வேதாவிற்கு மாளவிகா என்று பெயர் வைத்ததால் எனக்கும் குஷ்பூவுக்கும் பெரிய சண்டை வந்தது. காரணம், எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் மாளவிகா என்ற பெயர் வைக்கணும் என்று குஷ்பூ செலக்ட் பண்ணி வைத்திருந்தார்.
அப்போ, உன்னை தேடி படத்துடைய பாடலை காம்போஸ் செய்ய தேவா சாரை பார்க்க போனப்போ, அந்த பெயரை தேவா சாரிடம் சொல்லி ஒரு பாட்டு பண்ணோம். அந்த படத்தில் ஸ்வேதாவுக்கு மாளவிகா என்று பெயர் வைத்தோம். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு குஷ்புவுக்கு கோபம் வந்துவிட்டது. எனக்கும் அவங்களுக்கும் பெரிய சண்டையே நடந்தது. அப்படித்தான் இந்த மாளவிகா பெயர் வந்தது என்று ஓபனாக கூறினார் சுந்தர்.சி.