தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடிகை தமன்னா வலம் வருகிறார். பையா, சுறா, தில்லாலங்கடி, பாகுபலி, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கவாலாயா பாடலில் நடனம் ஆடியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் தமன்னா.
நடிகர் சிவக்குமாருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், நடிகர் சூர்யா – ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இளைய மகனான கார்த்தி, என் சாதியில் திருமணம் பண்ண வேண்டும் என ஒரு மேடையில் சிவக்குமார் தெரிவித்திருந்தார். அதேபோல், அப்பா பார்த்தை பெண்ணையே திருமணம் செய்து இனிமையாக வாழ்ந்து வருகிறார்.
முன்னதாக, பையா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை தமன்னாவை நடிகர் கார்த்தி காதலித்து வந்திருக்கிறார். இது சிவக்குமாருக்கு தெரியவர உடனே இருவரின் காதலை பிரித்ததோடு பையா படம் வெளியான அடுத்த ஆண்டே சாராத ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார் சிவக்குமார்.
அதன்பின்னர், பல ஆண்டுகள் கழித்து தமன்னாவுடம் சிறுத்தை, தோழா போன்ற படங்களில் கார்த்தி ஜோடியாக நடித்தார். இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி, அளித்த பேட்டி ஒன்றில் கார்த்தி – தமன்னா காதல் ரகசியம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில், கார்த்தி அந்தளவிற்கு ஸ்மார்ட் கிடையாது என்றும், அப்பா சொல்லை தட்டாதவர் என்றும் கூறியிருக்கிறார். மேலும், கார்த்தி – தமன்னா இருவரும் காதலிப்பதாக வெளியான வதந்திகளை தான் கேள்விப்பட்டேன், ஆனால், அது எந்தளவிற்கு உண்மை என்றால், இருவருக்கு மட்டும் தான் தெரியும் என்று சஸ்பென்ஸாக முடித்துள்ளார்.