fbpx

பட்டியலின பெண்கள் குறித்து அவதூறு……மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கார்த்திக் குமார்…

பட்டியலின பெண்கள் குறித்து பேசிய ஆடியோ வெளியாகி நடிகரான கார்த்திக் குமார், தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘யாரடி நீ மோகினி’ படத்தில் தனுஷிற்கு நண்பராக நடித்து கார்த்திக் குமார் பிரபலமானார். இவர், 2005ஆம் ஆண்டு பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்த சில நாட்களிலேயே கார்த்திக்கிற்கும், சுசித்ராவிற்கும் விவாகரத்து ஆனது. கடந்த 2021ம் ஆண்டு அம்ருதா ஸ்ரீநிவாசன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில், சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். அதில், அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்று குற்றஞ்சாட்டி இருந்தார். அதற்கு பதிலளித்து கார்த்திக் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட போவதில்லை.  பெருமையாக கருதுவேன் என்றும், அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே” என்று கூறினார்.

இந்நிலையில், கார்த்திக், சுசித்ராவிடம் பேசும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், “நீ அசிங்கமாக பேசுகிறாய், இதெல்லாம் படிச்சவங்க பேசுற பேச்சு இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுகிற மாதிரி நீ பேசுகிறாய். நீ ஏன் இந்த மாதிரி பேசுகிறாய் என்று தான் கேட்டேன். உன் வளர்ப்பு அப்படியில்லயே… உன் வளர்ப்பு நல்ல வளர்ப்புதான, நல்ல ஆச்சாரமான பிராமின் ஃபேமிலில இருந்துதான வந்த…” என்று கார்த்திக் பேசுகிறார்.

இதனையடுத்து, பட்டியலின பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை என்று கார்த்திக் குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “நான் இப்படி பேசவில்லை. அது என்னுடைய குரலும் இல்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொத்தமல்லி-யை யாராவது காசு போட்டு வாங்குவாங்களா? – Blinkit CEO எடுத்த முடிவு!

shyamala

Next Post

ஆம்னிப் பேருந்தில் சடலம்... பெண் ஐடி ஊழியர் மரணம்..... அதிர்ச்சி....

Fri May 17 , 2024
கோவைக்கு சென்ற ஐடி பெண் ஊழியர் ஆம்னி பேருந்தில் சடலமாக மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரை பாலத்துறை பகுதியில் வசித்து வருபவர் மகாலட்சுமி. இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மகாலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.  தனியார் சொகுசுப்பேருந்தின் கீழ் படுக்கையில் பயணம் செய்த […]

You May Like