fbpx

பிரபல நடிகை தான் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவியா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே!

நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி ஒரு பிரபல நடிகை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

தமிழ் சினிமாவில் 3 தலைமுறைகளுக்கு மேலாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து திரையுலகில் தனக்கென்று தனி அடையாளத்தை படைத்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.  எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் மட்டுமின்றி பல இளம் நடிகர்களோடு வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்திருக்கிறார். சொல்லப்போனால் இவர்களுடன் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். அதிலும் அந்த காலத்தில் காமெடி நடிகராக வலம் வந்து பல திரைப்படங்களின் வில்லனாகவும் இவர் அசத்தியிருக்கிறார். வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையின் மூலமாகவும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் வெண்ணிறாடை மூர்த்தி பேசும் வசனங்கள் அதிகமான இரட்டை அர்த்தம் கொண்டதாக இருக்கும். ஆனாலும் இதையும் அதிகமான ரசிகர்கள் ரசிக்க தான் செய்கிறார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய வசனத்தையும் காமெடியோடு சேர்ந்து கலக்கி பலரையும் கவர வைத்து விடுகிறார்.

இந்த நிலையில், வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனைவி பிரபல நடிகை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. அவரது மனைவி கதாநாயகி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகை மணிமாலா தான். இவர்கள் இருவரும் சந்தித்தது பலமுறை என்றாலும் காதல் இவர்களுக்குள் ஏற்பட்டது கிரிக்கெட் விளையாட்டின்போது தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் மற்றும் சுஹாசினி நடித்த சிந்து பைரவி உள்ளிட்ட பல படங்களில் நடிகை மணிமாலா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

“ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் மூளை செயல்பாடு மிகவும் சிக்கலானது..” ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

shyamala

Next Post

அதிரடி அறிவிப்பு! ஓட்டு போட வந்தால் இலவச விமான டிக்கெட்! எங்கு தெரியுமா?

Wed May 1 , 2024
வெளிநாடுகளில் இருந்து தேர்தலில் ஓட்டு போட வருபவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று வெளிநாட்டுவாழ் இந்தியர்களை ஓட்டு போடுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இஸ்லாமிய அமைப்பு அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன் பின்னர் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் […]

You May Like