fbpx

சொகுசு கார்… அதுவும் ரோல்ஸ் ராய்ஸ் கார் காவல்துறை வாகனமாம்…..

சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் காவல்துறை வாகனமாக வழங்கப்பட்டது அனைவரிடத்திலும் கவனம் பெற்று வருகிறது.

உலக அளவில் சொகுசு கார்களில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்கள். பணக்காரர்கள், பிரபலங்கள் மட்டுமே இந்த காரை பயன்படுத்தப்படுத்தி வருகின்றனர். கார் பிரியர்களிடையே ஒரு கனவாக இந்த கார் இருந்து வருகிறது. இந்த நிலையில் காவல்துறை வாகனமாக சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் கார் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு நகரம் மியாமி.  இந்த மியாமியின் காவல்துறையை மேம்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக மியாமி காவல்துறைக்கு காவல் வாகனமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த  வீடியோவை மியாமி காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. சிலர் இது குறித்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பார்க்கிங் டிக்கெட்டில் நாங்கள் செலுத்தும் பணத்தை வைத்து இதைத்தான் செய்கிறீர்கள் என்றும், சிலர் என்னால் இதை நம்பவே முடியவில்லை எனவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

உலகிலேயே முதன்முதலாக ‘ரோல்ஸ் ராய்ஸ்’காரை காவல் வாகனமாக மியாமி போலீஸ் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்களே உஷார்..!! மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை பலி..!! குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை..!!

shyamala

Next Post

AstraZeneca | தவறான தகவல்களால் சிதைக்கப்பட்ட கோவிட்-19 உயிர்காப்பான்.!!

Sun May 12 , 2024
AstraZeneca: கொரோனா நோயால் உலகமே அச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கோவிட்-19 நோய்க்கு எதிரான முதல் தடுப்பூசியான அஸ்ட்ராஜெனெகா ஜனவரி 4-ஆம் தேதி 2021 ஆம் வருடம் பரிசோதனையாக முதல் நபருக்கு செலுத்தப்பட்டது. கோவில் என்னும் உயிர் கொல்லி நோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி மனித குலத்தால் புகழப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் 2.5 பில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, மேலும் 6.3 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொரோனா காலகட்டத்தில் […]

You May Like