2024ம் ஆண்டுக்கான மெட் கலா பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் நடிகை ஆலியா பட்.
மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் மே மாதம் மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வில் ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீராங்கனைகள், அழகிகள், பத்திரிகையாளர்கள் என பலரும் ஆண்டுதோறும் கலந்து கொள்வார்கள். இதில், உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் புதுமையான உடைகள் அணிந்தபடி ரெட் கார்ப்பெட்டில் வலம் வருவார்கள்.
பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் உடைகள் விஷயத்தில் வித்தியாசத்தையும், புதுமையையும் கொண்டிருப்பவர் பாலிவுட் நடிகை ஆலியா பட். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பேஷன் நிகழ்ச்சியில் ஆலியா பட் புடவை அணிந்து கலந்து கொண்டு நேர்த்தியான தோற்றத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
உலக அளவில் பல பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்வில் அவரின் ஆடை, ஆபரணங்கள், அலங்காரம் என அனைத்திலும் தனியாக ஜொலித்த ஆலியா பட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு வெள்ளை கவுண் அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில், தற்போது புடவையில் ஜொலித்து குறிப்பிடத்தக்கது.
நீ மட்டும்தானு சொன்ன… இங்க இத்தன பேரு இருக்காங்க’..!! இன்ஸ்டா காதலனால் கதறிய இளம்பெண்..!!