கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ள படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.
2001-ம் ஆண்டு மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக கவுதம் வாசுதேவ் மேனன் களமிறங்கினார். அதை தொடர்ந்து, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணமாயிரம் என அடுத்தடுத்து இவரது படைப்பில் உருவான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மாஸ் ஹிட் கொடுத்தன. இப்படி பல வெற்றி படங்களை இயக்கி வரும் கவுதம் வாசுதேவ் மேனன், திரைப்படங்களில் குணசித்ர வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார்.
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவருடன் இந்த படத்தில் மம்முட்டியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 72 வயதிலும் இளம் ஹீரோ போல் மலையாளத்தில் கலக்கிக்கொண்டு இருப்பவர் மம்மூட்டி. இவருடன் நயன்தாரா இதற்கு முன் மலையாளத்தில் ‘புதிய நியமம்’ என்ற திரைப்படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் மம்மூட்டி உடன் இணைந்து நடிக்கவுள்ளாராம் நயன்.
பயணிகளுக்கு குட் நியூஸ்….. பஸ், மெட்ரோ, ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணம்….