fbpx

ரூ.2 கோடி வைர நெக்லஸ் அணிந்த நடிகர்….. ஹை ஹீல்ஸ் அணிந்து அசத்திய நடிகரின் புகைப்படம் வைரல்….

ஹை ஹீல்ஸ், நெக்லஸ் அணிந்து மாஸ் லுக்கில் வலம் வரும் நடிகரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், கவனத்தை ஈர்க்க பல விஷயங்களை செய்வார். அதற்காக திடீரென்று அரை நிர்வாணத்தில் புகைப்படங்கள் பகிர்வது போன்றும், பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், உடைகளில் புது ஃபேஷனை முயற்சித்து பார்ப்பதில் ரன்வீர் சிங் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

அந்த வகையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர்  சமீபத்தில் கலந்து கொண்டார். அதில், அவர் அணிந்திருந்த வைர நெக்லஸ் மற்றும் ஹை ஹீல்ஸ் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

வெள்ளை நிற கோட் சூட் அணிந்து கொண்டு படு மாஸாக ரன்வீர் சிங் வந்தார். கழுத்தில் முறுக்கு சங்கிலி போல வைர நெக்லஸை அணிந்து கொண்டு ரன்வீர் சிங் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் அணிந்திருந்த நெக்லஸின் விலை 2 கோடி ரூபாயாம். இதுமட்டுமின்றி, வெள்ளை உடைக்கு ஏற்ற ஷூக்களை அணியாமல், வெள்ளை நிற ஹை ஹீல்ஸ் அணிந்து அசத்தினார் ரன்வீர்.

விலை மதிப்புள்ள நெக்லஸ் மற்றும் ஹை ஹீல்ஸை நடிகைகள் அணிந்து வித்தியாசமாக போஸ் கொடுப்பதை பார்த்திருப்போம். ஆனால், நடிகர் ஒருவர் இதனை அணிந்து மாஸ் லுக்கில் வலம் வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியை ஆஃப் செய்யும்போது இந்த விஷயத்தை மட்டும் பண்ணாதீங்க..!! கரண்ட் பில் எகிறிடும்..!!

shyamala

Next Post

மகன்களுடன் அன்னையர் தினம் கொண்டாடிய நயன்..... இணையத்தில் வைரலாகும் வீடியோ....

Tue May 14 , 2024
நடிகை நயன்தாரா அவரது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். தென்னிந்திய சினிமாவில் மாஸ் காட்டி வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். தற்போது, இவர் நடித்து வரும் மண்ணாங்கட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு இணைந்து […]

You May Like