fbpx

உள்ளே போனா வெளியே வர முடியாது…. பிக்.. பிக்.. பிக்பாஸ் போல….

நடிகர் ரஜினியின் பண்ணை வீட்டில் உள்ளே போனா வெளியே வர முடியாதாம் அது குறித்து தற்போது பார்க்கலாம்…

திரைத்துறையை சார்ந்த பல நடிகர், நடிகைகள் தங்களுக்கு என பண்ணை வீடு வைத்துள்ளனர். அந்த வகையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்  ரஜினி. அவருடைய பண்ணை வீடு கேளம்பாக்கத்தில் உள்ளது. இவர், தற்போது, 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், அவரது பண்ணை வீடு குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ரஜினி தனது பண்ணை வீட்டில் இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பண்ணை வீட்டில், நீச்சல் குளம் உட்பட அனைத்து வசதிகளும் இருக்கின்றன. அங்கே கங்காதரன் என்ற நாய் ஒன்று உள்ளது. அதனை கங்கா என்று ரஜினி செல்லமாக அழைப்பார். மேலும், பண்ணை வீட்டில் சமையல், தோட்டங்களை பராமரித்தல் என ஒவ்வொன்றுக்கும் பணியாட்களை நியமித்துள்ளனர். அவ்வாறு பணி புரியும் பணியாட்களுக்கு 3 அல்லது 4 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்படுமாம். அதுவரை அவர்கள் வெளியே செல்ல முடியாது என்றும் கூறப்படுகிறது. 

அதேநேரம் ஒப்பந்தம் முடிந்து, அவர்கள் வெளியேற நினைத்தால் அவர்களுக்கு நல்ல தொகை கொடுத்து ரஜினி அனுப்பி வைப்பார் என்றும் சொல்லப்படுகிறது. 

Solar Storm | பூமியை தாக்கிய சூரிய புயல்.!! வானில் நிகழ்த்திய மாயாஜாலம்.!! முழு விபரங்கள்.!!

shyamala

Next Post

இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடுறீங்களா..? உங்களுக்கு இந்த பிரச்சனை வருவது உறுதி..!! எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

Mon May 13 , 2024
இன்று நாம் வேகமாக ஓடும் வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால், சாப்பிட கூட நேரமில்லை. அந்த அளவுக்கு பிஸியான வாழ்க்கையை வாழ்கிறோம். இதனால், அந்த நேரத்தில் பசியை போக்கிக் கொள்ளக் கிடைத்ததைச் சாப்பிடுகிறோம். ஆனால், இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை மறந்து விடுகிறோம். அந்தவகையில், பலர் இரவில் தாமதமாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதாவது, இரவு 9 மணி முதல் 12 மணி வரை சாப்பிடுவார்கள். […]

You May Like