fbpx

வரலட்சுமிக்கு ஐ.பி.எல். டிக்கெட் வாங்கி கொடுத்த பிரபலம்… யார் தெரியுமா……

நடிகை வரலட்சுமிக்கு ஐ.பி.எல். டிக்கெட் வாங்கி கொடுத்த பிரபலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்ட கோழி 2, சர்கார், மாரி 2, இரவின் நிழல் படங்களின் மூலம் கவனம் பெற்றார்.  கடைசியாக தெலுங்கில் வெளியான ‘ஹனுமான்’ படத்தில் நடித்திருந்தார். அடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராயன்’ படத்தில் நடித்துள்ளார்.

மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பதை வரலட்சுமி மணமுடிக்க உள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகை வரலட்சுமி சரத்குமார்  பங்கேற்றார்.

அதில் பேசிய வரலட்சுமி, ‘தான் பார்த்த முதல் இரண்டு ஐ.பி.எல். போட்டிகளின் டிக்கெட்டுகளை தனக்கு தளபதி விஜய் தான் வாங்கி கொடுத்தார் என தெரிவித்துள்ளார்.  இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கடந்தாண்டு தளபதியாக..! இந்தாண்டு தலைவராக..! சந்திக்கும் விஜய்!! காத்திருக்கும் சர்ஃபைர்ஸ்!!

shyamala

Next Post

விழிபிதுங்க வைக்கும் தங்கம் விலை!! ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்பு!!

Mon May 13 , 2024
ஒரு சவரன் தங்கம் விலை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் ரூபாயை தொட வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது. தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.54 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. என்னதான் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டாலும் மக்களுக்கு தங்கம் மீதான ஆர்வம் மட்டும் குறையவே […]

You May Like